Connect with us

News

“ஸ்ட்ரெய்ட்டாக படுத்தால் அதுக்கு ஈஸியா இருக்கும்.. அதனால தற்போது வரை..” நயன்தாரா ஓப்பன் டாக்..!

By TamizhakamFebruary 10, 2024 8:24 AM IST

நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் சிறுவயதில் தனக்கு இருந்த நம்பிக்கை குறித்தும் தற்போது வரை அது தொடர்ந்து கொண்டிருப்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

தொகுப்பாளனி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகை நயன்தாரா.

அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் கிடையாது.. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வெளியான திகில் திரைப்படமான கனெக்ட் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி தான். திகில் திரைப்படம் என்பதால் அந்த படம் சார்ந்த கேள்வியை எழுப்பும் நோக்கில் உங்களுக்கு சிறு வயதில் ஏதேனும் திகில் தரக்கூடிய விஷயம் இருந்திருக்கிறதா..?

பொதுவாக தூங்கும் போது தலைக்கு அருகில் துடைப்பம், செருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு படுத்தால் பேய் வராது என்று கூறுவார்கள். அது போன்ற ஏதாவது ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இதற்கு பதில் அளித்த நடிகை நயன்தாரா கண்டிப்பாக எனக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை இருக்கிறது. இருட்டாக இருந்தால், விளக்கை அணைத்தால் பேய் வந்து விடும் என்று கூறுவார்கள்.

இதனால் தற்போது கூட இரவு தூங்கும் போது லைட் ஆஃப் செய்ய மாட்டேன். மேலும் படுக்கும் பொழுது ஸ்ட்ரைட்டாக படுத்தால் பேய் நம்முடைய கழுத்தை நெரிப்பதற்கு ஈசியாக இருக்கும் என்று கூறுவார்கள். அதை யார் என்னிடம் சொன்னார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை.

ஆனால் தற்போது வரை நான் அதனை நம்பிக் கொண்டிருக்கிறேன். இதனால் படுக்கும்போது நான் ஸ்ட்ரைட்டாக.. அதாவது.. மல்லாக்க படுத்தபடி படுப்பது கிடையாது. ஏதாவது ஒரு பக்கம் ஒருக்கழித்து தான் படுப்பேன்.

இது எல்லாம் நான் உண்மையான நம்புகிறேனா..? என்றால் தெரியாது. ஆனால், அதன் காரணமாக நான் பயப்படுகிறேன் என்பது மட்டும் உண்மை என கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இனிமேல் நான் எப்படி நேராக படுத்து தூங்க போகிறேன் என்று தெரியவில்லை.

நீங்கள் கூறுவதை கேட்டால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது என குபீர் சிரிப்பை வெளிப்படுத்தினார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top