Connect with us

News

«அந்த வேதனை.. எனக்கு வேண்டாம்.. நான் விலகிக்கிறேன்..› – நயன்தாரா அதிரடி முடிவு..! ரசிகர்கள் ஷாக்..!

By TamizhakamSeptember 7, 2022 6:49 AM IST

நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து முற்றாக விலகுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சினிமாவில் நடிகையாக தன்னுடைய பயணம் நிறைவடைந்துவிட்டது நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நடிப்பதில் இருந்து விலகி விட்டாலும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து தொடர்ந்து பயணிக்க இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது. எதற்காக விலகினார் என்ற ஒரு காரணமும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் தன்னுடைய தாலியை மறைத்துக் கொண்டு அல்லது கழட்டி வைத்துவிட்டு நடிக்க வேண்டிய சூழ்நிலை. அந்தக் கொடுமையான நிலை.. வேதனை.. எனக்கு வேண்டாம் எனவே நான் சினிமாவிலிருந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய தாலி விஷயத்தில் நடிகை நயன்தாரா மிகவும் சென்சிட்டிவான ஒரு மனநிலையில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இவர் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொழுது கூட தன்னுடைய தாலி தெரியும் படியே புகைப்படங்களை வெளியிடுகிறார். பொதுவாக திருமணமான நடிகைகள் கூட தாலியை மறைத்துக் கொண்டுதான் பொது இடங்களில் தோன்றுவார்கள்.

ஆனால் நடிகை நயன்தாரா அப்படி இல்லாமல் நடிகைகளில் இருந்து மாறுபட்டு நடிக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் இதனால் தான் நீங்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறிவருகிறார்கள். தற்போது நடிகை நயன்தாரா நடித்து வரும் சில படங்களில் கூட தாலியை கழட்டாமல் உடைக்குள் மறைத்து விட்டு காட்சிகளில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கண்டிப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போது தொடர்ந்து தாலியை மறைத்துக்கொண்டு நடிக்க முடியாது அப்படியான உடைகளையே தான் அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் கண்டிப்பாக இதை இயக்குனர்களுக்கு மிகப் பெரிய தலைவலி கொடுக்கும்.

தாலியை மறைத்துக்கொண்டு நடிக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டும். கண்டிப்பாக இதற்கு சினிமா அனுமதிக்காது. எனவே நான் நடிப்பிலிருந்து விலகி கொள்கிறேன் என்ற முடிவில் நன்றாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் நடிகை நயன்தாரா இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நடக்க போகிறது என்றும்  என்ன நடக்க போகிறது என்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top