Connect with us

News

நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

By TamizhakamApril 3, 2024 5:10 AM IST

திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் பிருந்தா மாஸ்டர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உஉள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து புகழ் பெற்ற நடன இயக்குனராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

பல்வேறு தமிழ் படங்களுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடன இயக்குனராக இருந்திருக்கிறார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது.

நடன இயக்குனர் பிருந்தா:

மின்சார கண்ணா திரைப்படத்தில் தான் இவர் முதன்முதலாக நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

குறிப்பாக விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி திரைப்படத்தில் திரிஷா மற்றும் விஜய்க்கு சிறந்த நடனத்தை கற்றுக் கொடுத்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது அதுதான் இவருக்கு சிறந்த அறிமுகமாகவும் இருந்தது .

பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கும் பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குவதற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார்.

அத்துடன் சிறந்த நடன அமைப்பாளருக்கான தமிழக மாநில தலைவர் இரண்டு முறை பெற்று இருக்கிறார். சிறந்த நடன அமைப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருதியும் நான்கு முறை பெற்று இருக்கிறார்.

இவர் கிட்டத்தட்ட எத்தனை விருதுகளை பெற்று தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடன கலைஞராக பணியாற்றிய இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வரைக்கும் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக பிருந்தா மாஸ்டர்:

நடன இயக்குனராக இருந்த பிருந்தா மாஸ்டர் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் முகம் காட்டினார்.

இந்நிலையில் பிருந்தா மாஸ்டர் பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா, த்ரிஷா எப்படிப்பட்டவர்கள் என்ற ஒரு உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

நடிகை திரிஷாவும் நயன்தாராவும் கொரியாகிராபர் பிருந்தாவோட வீட்டுக்கு நைட் ஒரு மணிக்கு போய் இருக்காங்க.

இதையும் படியுங்கள்: தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

வீட்டுக்கு போனதும் இவங்க மூணு பேரும் ரொம்பவே ஜாலியா பேசி அரட்டை அடிச்சு இருக்காங்க. எல்லாரும் கூடி உட்கார்ந்து பேசுனதுல டைம் போனதே சுத்தமா தெரியலையாம் 5 மணி ஆகிட்டு இருக்கு.

இப்பவே டைம் ஆயிடுச்சு நான் வீட்டுக்கு போகணும் மார்னிங் சூட் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க பிருந்தா உடனே அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போலாம்னு கிளம்பி இருக்காங்க.

நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து:

ஆனால் பிருந்தா மாஸ்டரை அழைத்துக்கொண்டு கார் ஓட்டிட்டு போனவங்க அவங்கள வேறு எங்கையோ கூப்பிட்டு போனாங்களாம். எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்கீங்க என்று கேட்டாராம்.

உடனே த்ரிஷா கொஞ்சம் அமைதியா உட்காருங்க….எங்களை காலையிலேயே ஷூட்டிங்கும் வர சொல்றீங்க… அதுமட்டுமில்லாமல் ரொம்ப ஹெவியான டான்ஸ் பெர்பாமென்ஸ் கொடுத்து ரொம்பவும் கஷ்டப்படுத்துறீங்க.

அதனால் இனிமேல் காலையிலே ஷூட்டிங் வரசொல்லமாட்டேன், ஹெவி பெர்பார்மென்ட்ஸ் கொடுக்கமாட்டேன்ன்னு சொல்லுங்க அப்போ தான் கார் வீட்டுக்கு போகும்.

நயன்தாரா, திரிஷாவும் செய்த சம்பவம்:

இல்லனா வண்டி எங்கே தான் நிற்கும் அப்படின்னு மிரட்டினாராம் நடிகை திரிஷா. பிருந்தா மாஸ்டர் வேற வழி இல்லாம சரி ஓகே இதுக்கப்புறம் உங்களை காலையிலேயே ஷூட்டிங் வரச்சொல்லி தொல்லை பண்ண மாட்டேன்.

ஹெவி பெர்பார்மென்ஸ் கொடுக்கவே மாட்டேன் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இந்த இன்சிடென்ட்க்கு அப்புறமா மாஸ்டர்ரும் திரிஷாவும் சேர்ந்து ஒரு படத்தில் ஒர்க் பண்ணி இருக்காங்க.

இதையும் படியுங்கள்: அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஆனால் அப்பவும்… நாளைக்கு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது காலையில ஷூட்டிங்க்கு வந்துடனும் அப்படின்னு த்ரிஷா கிட்ட பிருந்தா மாஸ்டர் சொல்லி இருக்காங்க உடனே திரிஷா முறைத்தாராம்.

இந்த சம்பவதை பிருந்தா மாஸ்டர் பேட்டி ஒன்றில் நயன்தாராவும் ரொம்பவே சேட்டை பிடிச்ச பொண்ணுங்க அவங்க இந்த மாதிரி வேலை எல்லாம் செஞ்சிருக்காங்க எனக்கு என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த கலகலப்பான பேட்டி நடிகைகளின் உண்மையான முகம் வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top