Connect with us

News

கடும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..! போட்ட போடில் போட்டோவோ டெலீட் செய்துவிட்டு ஓட்டம்..!

By TamizhakamAugust 5, 2024 6:10 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வரும் நடிகை நயன்தாரா எப்போதும் தனது உடல் எடையும் தனது உடல் ஆரோக்கியத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நயன்தாரா:

நயன்தாரா நடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதைவிட பல மடங்கு அதிகம் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் செம்பருத்தி டீ யின் நன்மைகளை குறித்து தனது Instagram பக்கத்தில் பகிர்ந்த நயன்தாரா பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார்.

அந்தப் பதிவில் «செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இதனை எனது உணவு திட்டத்தில் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால் என்றும் கூறியிருந்தார்.

செம்பருத்தி டீ நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் நயன்தாரா குறிப்பிட்டிருந்தார்.

செம்பருத்தி டீ பதிவிற்கு கல்லீரல் மருத்துவர் பதில்:

செம்பருத்தி பூவில் உள்ள அதிக ஆன்டிஆக்சிடென்ட்கள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயரத்தை அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும் என்றும் அந்த பதிவில் நயன்தாரா கூறியிருந்தார்.

மேலும், இந்த செம்பருத்தி டீ யை எப்படி தயாரிப்பது என தனது ஊட்டச்சத்து நிபுணரின் சமூக வலைதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறியிருந்தார்.

நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்துள்ள நயன்தாராவை 87 லட்சம் பேர் ஃபாலோ செய்து வரும் நிலையில் இந்த பதிவு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

இந்த செம்பருத்தி டீ பதிவுக்கு பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட துவங்கினார்கள்.

அப்படித்தான் கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்ற மருத்துவர் நயன்தாராவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆண்களின் விதைப்பை சிதைக்கும் செம்பருத்தி டீ:

அந்த மருத்துவர் தனது எக்ஸ்ளத்தில் நயன்தாரா குறிப்பிட்டு இருந்த செம்பருத்தி தேநீர் பல்வேறு உடல் பிரச்சனைக்கு பயனாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

நயன்தாரா குறிப்பிட்டு இருந்த செம்பருத்தி டீயை தினமும் பருகி வந்தால் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயரத் அழுத்தம் ,இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.

மேலும் செம்பருத்தி தேநீர் குடிப்பதால் ஆண்களின் விதைப்பை பாதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

சிறுமிகள் அந்த தேநீரை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப்போவதுடன் அவர்களின் எடையில் பிரச்சனை வரும் என்று கல்லீரல் மருத்துவர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் எச்சரித்தார்.

பதிவினை அதிரடியாக டெலீட் செய்த நயன்:

இந்த மருத்துவர் சொல்வது போல் செம்பருத்தி தேனீர் மிகவும் ஆபத்தானதா? அல்லது அருந்தலாமா?என்று மருத்துவர்கள் பலர் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

முன்னதாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு ரசாயனத்தை பயன்படுத்துவதால் வைரஸ் நோய் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என கூறிய சமந்தாவுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நயன்தாராவின் செம்பருத்தி டீ தொடர்பான பதிவிற்கு பலரும் சர்ச்சையான கருத்துக்களை கூற அந்த பதிவை உடனடியாக நீக்கி விட்டார் நடிகை நயன்தாரா.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top