Connect with us

News

எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

By TamizhakamAugust 9, 2024 8:39 PM IST

பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நீலிமாராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு வளர்ந்த பிறகு தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நீலிமா ராணி. பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திரைப்பட காட்சிகளிலேயே ஏதோ ஒரு சின்ன இடத்தில் வந்துவிட்டு அவர்கள் சென்று விடுவார்கள்.

நீலிமா ராணி ஓப்பன் டாக்

ஆனால் நீலிமாராணியை பொறுத்த வரை துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதயத்திருடன், திமிரு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மொழி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நிறைய படங்களில் நிறைய பாத்திரங்களில் நடித்த நீலிமாராணி சினிமா கதாநாயகிகளை போலவே இளமை குறையாமல் இருந்து வருகிறார். மொழி திரைப்படம் 2007 இல் வந்தது. அந்த திரைப்படத்தில் நடித்த போது எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இப்பொழுதும் நீலிமா ராணி இருந்து வருகிறார்.

எத்தன வருஷம் இருப்பேன்..

இது இல்லாமல் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களை விடவும் சீரியல்களில்தான் நீலிமா ராணி பிரபலமானவர். மெட்டி ஒலி மாதிரியான பிரபலமான சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருக்கிறார். நீலிமா ராணிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு என்பது பெரிதாக கிடைக்கவில்லை.

இது நீலிமா ராணி ரசிகர்கள் பலருக்குமே அதிருப்தியை கொடுக்கும் விஷயமாகும். ஒரு சிறந்த நடிகையை தமிழ் சினிமா தவற விட்டிருக்கிறது என்று இது குறித்து இப்போதும் பலரும் பேசுவது உண்டு. நீலிமா ராணி சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய 21 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் நீலிமாராணியை விட அதிக வயது மூத்தவர். அதனை வைத்து அப்பொழுது நிறைய சர்ச்சைகள் சென்று கொண்டிருந்தன. மேலும் நீலிமாராணிக்கு விருப்பமே இல்லாமல் அந்த திருமணம் நடந்து விட்டதாகவும் பேச்சுக்கள் இருந்தன.

நைட் தூங்கும் போது இது இருக்கா..

இந்த நிலையில் இதை குறித்து பேசிய நீலிமா ராணி கூறும் பொழுது நான் ஆசைப்பட்டுதான் எனது திருமணத்தை செய்து கொண்டேன். எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அது எனது விருப்பத்தின் பெயரில்தான் நடந்தது மேலும் அதனால் நான் மகிழ்ச்சியாகதான் இருக்கிறேன் என்னை பொறுத்தவரை மனித வாழ்க்கை என்பது ரொம்ப காலம் எல்லாம் கிடையாது.

எனவே நாம் ஒரு 60, 70 வயதாகும் பொழுது நமது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பரவாயில்லை ஏதோ நன்றாக வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறி இருக்கிறார் நீலிமா ராணி.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top