சீரியலில் அற்புதமான நடிப்பின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய நீலிமா ராணி (Neelima Rani) பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக இவர் திரையுலகில் ஜொலித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர்.
Neelima Raniஇதனை அடுத்து வளர்ந்த பிறகு இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் திமிரு, பிரியசகி, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் சின்னத்திரைக்குள் சீரியலில் நடிப்பதற்காக களம் இறங்கினார். அந்த வகையில் 1998 ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் காலங்கள், மெட்டி ஒலி, கஸ்தூரி, அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றுவிட்டார்.
Neelima Raniஎப்போது திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று செட்டிலாகி விட்ட இவ சமூக வலைதள பக்கங்களில் இவருடைய போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் அண்மையில் தனது குண்டாகி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்ட போது ரசிகர்களின் மத்தியில் பலவிதமான கருத்துகளும் பேசப்பட்டு வந்தது.
மேலும் இவர் இரண்டாவது குழந்தைக்கு தாயான சமயத்தில் தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் மட்டுமல்லாமல் குழந்தைக்கு பால் ஊட்டுகின்ற சமயத்தில் சில ரசிகர்கள் இதுபோல பேசியது அவருக்கு மனதில் கவலையை ஏற்படுத்தி விட்டது.
Neelima Raniஅதனை வெளிப்படையாக சொல்ல நினைத்திருந்தாலும் அதை அவர் சொல்லி என்ன பிரயோஜனம் என்று சொல்லாமலேயே பதிலடி கொடுத்து விட்டார். இதுதான் தற்போது இணையத்தை வைரலாக ஆக்கிரமித்து உள்ளது.
மேலும் கட்டாயம் அவர் பீல் செய்வதற்கு அர்த்தம் உள்ளது என்று பலரும் தற்போது அவருக்கு ஆதரவாக கமெண்டில் அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்வது வருகிறார்கள்.
எனவே இனியாவது பெண்களின் நிலையை உணர்ந்து அவர்கள் மனம் நோக கூடிய வாசகங்களை வெளியிட்டு அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Loading ...
- See Poll Result