நீலிமா ராணி,(Neelima Rani) தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். சீரியல்களிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இப்போது சினிமா – சீரியல் என்ற இரட்டை குதிரைகளில், சவுகரியமாக சவாரி செய்து வருகிறார்.கடந்த 1983ம் ஆண்டில் பிறந்த நீலிமாவுக்கு வயது 39 கடந்திருக்கிறது.
எனினும், அம்மணி இன்றும் அழகு தேவதையாக ஜொலிக்கிறார்.தேவர்மகன் படத்தில், சிவாஜி வீட்டில் உள்ள பெண் சிறுமிகளில் ஒருவராக நீலிமாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்போது, அவருக்கு 39 வயது என்பதை ரசிகர்களால் நம்ப முடியாத அளவுக்கு, நீலிமா, இளமையாகத் தெரிகிறார்.
Neelima Raniஇதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் பல கதாபாத்திரங்களில் நீலிமா நடித்திருக்கிறார். மகள், சகோதரி, அம்மா, அண்ணி, கல்லூரி மாணவி, வில்லி என எந்த கேரக்டர் என்றாலும், அதில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை தன்வசப்படுத்துபவராக இருக்கிறார்.
கார்த்தி – காஜல் அகர்வால் நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தில், நடித்ததற்காக, நீலிமா ராணிக்க, சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது.
Neelima Raniடிவி சீரியல்களில் மிக பிரபலமான பல தொடர்களில், நீலிமா ராணி நடித்திருக்கிறார். அந்த வகையில் மெட்டி ஒலி, தற்காப்பு கலை தீராதா, கோலங்கள், புதுமைப்பெண்கள், தென்றல், இதயம், பவானி, செல்லமே என்ற சில சீரியல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சினிமாவில் தேவர்மகன் படத்தில் துவங்கி பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம்பி, பிரியசகி, இதய திருடன், ஆணிவேர், மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதிராஜா, புகைப்படம், முரண், காதல் பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இன்னும் பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் கிடைத்தால் இரண்டுக்கும் போதி நேரம் ஒதுக்கி, தனது கலைச் சேவையை அம்மணி தொடர்ந்து வருகிறார்.
Neelima Raniமற்ற நடிகைகளை போலவே, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நீலிமா, சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் மேட்சை காண, தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறார். அங்கே, பார்வையாளர் பகுதியில் இருந்துகொண்டு மஞ்சள் நிற டீ சர்ட், தொப்பி, ஜீன்ஸ் பேண்ட் கெட்டப்பில், தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்துகொண்டு, குஷியாக கிரிக்கெட் மேட்சை கண்டுகளிக்கிறார். அதை குதூகலமாக காட்சிளை, புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார் நீலிமா.
புகைப்படங்களை பதிவிட்டு, அதற்குரிய கேப்சனில், ‘ஸ்டேடியத்திற்கு அத்வைதாவின் முதல் வருகை, எங்கள் வீரர்கள் ஸ்டேடியத்தை சுற்றி வந்தது உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டது அற்புதமான குழு உணர்வு! வெற்றி தோல்வி எங்களுக்கு முக்கியமில்லை, நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பது மட்டுமே ரசிகர்களாகிய நாங்கள் விரும்புகிறோம்!,’ என்று அதில் நீலிமா குறிப்பிட்டு இருக்கிறார்.
Neelima Raniஅதாவது, ஐபிஎல் போட்டியை நேரில் பார்ப்பவர்கள் பலரும், நீலிமா குறிப்பிடுவதை போல வெற்றி – தோல்வியை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வீரர்களை நேரில் பார்ப்பதும், அவர்களது ஆட்டத்தை நேரில் ரசிப்பதும், அந்த குதூகல உணர்வுமே பிரதானமானது, என்பதை நீலிமா வெளிப்படையாக கூறி இருக்கிறார். இதற்கு, லைக் குவிந்து வருகிறது.
அதே வேளையில், இரண்டு குழந்தைகளின் தாயாகி, வயது 40 ஐ நெருங்கும் நிலையில் நீலிமாவின் இளமையான தோற்றம், அழகும் ரசிகர்களை கிறங்கடிக்கவே செய்திருக்கிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result