“நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு நினைக்கல..” “காபி” தம்பதி சொன்ன வார்த்தை.. ஆனா நடந்ததே வேற விஷயமாம்..

பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் வைக்காத விஜய் டிவி சன் டிவிக்கு போட்டோ போட்டியாக விளங்குகிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் கணவன் மற்றும் மனைவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்கள்.

அந்த வகையில் மனைவியாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் கணவன் வேலைக்கு சென்று வந்தால் காபி போட்டு கொடுத்தால் குடிப்பார்கள் என்று சொன்னது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதிகளான தமிழ் அரசி மற்றும் சபரி அண்மையில் பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த தம்பதிகள் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் நுழைந்து விட்டாலே பிரபலம் ஆகாத நபர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் இவர்கள் இருவரும் தற்போது பிரபலங்களாக மாறிவிட்டார்கள். அத்தோடு காபி தம்பதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் எதார்த்தமாக பேசுகிறேன் என்ற அர்த்தத்தில் எதையெதையோ பேசிவிட்டு ஒரு பெண் இப்போது இணையத்தில் அதிகளவு விமர்சனங்களை பெற்றிருக்கக் கூடிய வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். அதிலும் இவரை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் திட்டி வருகிறார்களாம்.

காபி தம்பதி சொன்ன வார்த்தை..

இதற்கு காரணம் பெண் தன்னுடைய கணவர் ஆபீசுக்கு போயிட்டு வந்தால் காபி போட்டு கொடுத்தால் நான் குடிப்பேன் என்று எதார்த்தமாக சொன்ன விஷயத்தை அடுத்து பெண்களின் தாக்குதலான விமர்சனங்கள் அதிக அளவு கிடைத்துள்ளது.

மேலும் அந்த பேட்டியில் அவர் பேசும் போது நீயா நானா நிகழ்ச்சியில் கலந்த கொண்ட பின்பு தன் வாழ்க்கை பெரிய அளவு மாறிவிட்டது. அதற்கு அந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய துணையாக இருந்திருப்பதாக கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் தான் வேறு ஒன்று பற்றி பேச வேண்டும் என்று நினைத்து இருந்ததாகவும் ஆனால் என்னுடைய கணவர் காபி போட்டு தந்தால் தான் குடிப்பேன் என்று பேசி விட்டதாகவும் சொன்ன அவர் தான் பிசினஸ் செய்வதாக கூறியிருக்கிறார்.

இந்த தம்பதிகள் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கணவர் ஆபீசுக்கு போய்விட்டு வருகிறார் என்றால் காபி போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.மேலும் பொதுவாக நான் டீ காபி எல்லாம் குடிப்பது கிடையாது என்ற பதிவையும் செய்திருக்கிறார்.

நடந்த விஷயம் வேற மாதிரி..

காதல் திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் வீட்டில் பெரிய அளவு சப்போர்ட் இல்லாத நிலையில் கணவரோடு நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் நினைத்திருக்கிறார்.

அவர் கணவர் வேலைக்குச் சென்ற பிறகு அனைத்தையும் கவனித்துக் கொள்ளக் கூடிய இவர் அவர் வந்த பிறகு காபி போட்டு தந்து அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை பேச வேண்டும் என்று சொன்னதோடு ஸ்நாக்ஸ் செய்து தரக்கூடிய தனக்கு காபி போடத் தெரியாதா? என்பது பற்றி தான் பேச நினைத்ததாக சொன்ன அவர் பதட்டத்தில் வேறு மாதிரி பேசி விட்டாராம்.

இதனை அடுத்து இணையத்தில் தன் கணவர் பேசும் பொருளாக மாறிவிட்டார். பலரும் என்னை தவறாக நினைத்து திட்டுகிறார்கள். எனினும் என் கணவர் ஹீரோவானது எனக்கு சந்தோஷம் தான் என பேட்டியில் நீயா நானா பிரபலம் கூறினார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …