இந்த ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணா நல்லா இருக்கும்.. வெக்கமின்றி கூறிய நித்யா ராம்..!

தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் சின்னத்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வலம் வரும் நடிகையாக திகழும் நித்யா ராம் அண்மையில் பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை சீரியல்களோடு நின்று விடாமல் வெள்ளித்திரைகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

நித்யா ராம்..

நடிகை நித்யா ராம் ஒரு நடுத்தர கலை குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் இவரது குடும்பத்தில் நிறைய நடன கலைஞர்கள் உள்ளார்கள். அந்த வகையில் இவரும் நடன கலை பயின்றவர் என்பது பலருக்கும் தெரியாது.

உயிரி தொழில்நுட்பத்தில் பட்டப் படிப்பை பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் நடிப்புத் துறைக்கு வந்தார். இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு ஜீ கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பென்கியல்லி அரலிடா ஹூவு என்ற தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் யாரு தெரியுமா..? பலரும் அறியாத உண்மைகள்..!

தமிழைப் பொறுத்த வரை 2012 ஆம் ஆண்டு அவள் என்ற தொடரில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து தமிழ் மொழிக்கு அறிமுகமான இவர் விஜய் தொலைக்காட்சியில் முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அடுத்து பல கன்னட மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்த இவருக்கு 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நந்தினி என்ற பிரம்மாண்டமான கற்பனை தொடரில் நந்தினி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இந்த தொடரை பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் இயக்கி இருந்தார். மேலும் இத்தொடரில் குஷ்பூ, மாளவிகா, ராகுல் ரவி, ரியாஸ்கான், விஜயகுமார் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மெர்சி செந்திலோடா ரொமான்ஸா..

திரைப்படத்தைப் பொறுத்த வரை மலையாளத்தில் அடுக்குலையில் பணி உண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2019 ஆம் ஆண்டு லஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தமிழ் தொடரிலும் நித்யா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் நடிகர் மெர்சி செந்தில் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் கண்களைப் பார்த்து நீண்ட நேரம் பேச முடியாது. அந்த அளவு எக்ஸ்பிரசனை வெளியிடக்கூடிய அற்புத நடிகர் என்பதை தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மெர்சி செந்திலோடு சேர்ந்து ரொமான்ஸ் பண்ணா நல்லா இருக்கும் என்று இவர் சொன்ன விஷயம் தற்போது காட்டு தீ போல இணையங்களில் பரவி ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெட்கமில்லாமல் பேசிய பேச்சு..

இதனை அடுத்து சில ரசிகர்கள் அட.. இப்படியுமா? ஒரு நடிகரை பிடிக்கும் என்பதற்காக வெளிப்படையாக பேசுவார்கள் வெட்கமின்றி என்று நித்யாராமை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!

அத்தோடு மெர்சி செந்திலின் நடிப்பை வர்ணித்து இருக்கக்கூடிய நித்யா ராமை பாராட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு கலைஞன் எப்படி எல்லாம் முக பாவங்களை மாற்றுவார்கள் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருவதால் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. அத்தோடு சன் குடும்ப விருதுகளில் சிறந்த ஜோடி தேவதைகள் விருது சிறந்த கதாநாயகி சிறந்த நடிகை போன்ற விருதுகளை நந்தினி பகுதி ஒன்றிற்காக இவர் பெற்றிருக்கிறார்.

இதில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார் ஆனால் வெல்லவில்லை.

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …