பெண்கள் தற்போது ஏமாறுவதற்கு காரணமே மோசமான பசங்களை தேடித்தேடி காதலித்து வருகிறார்கள் என்று செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.
கோவையைச் சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் ஆரம்ப நாட்களில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியை செய்திருக்கிறார். இதனை அடுத்து பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, நியூஸ்7 என பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
பனிமலர் பன்னீர்செல்வம் பெண்ணியம் பற்றி பேசி வரும் மிகத் தீவிரப் பெண்ணியவாதியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் இவரை கடை திறப்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒருநாள் கடையில் தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார். இந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
மிகவும் துணிச்சலான பெண்ணாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அதிக கோபத்தோடு ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
இதில் பெண்களை நோக்கி குடிகாரன் மற்றும் மோசமானவர்களை தேடி தேடி தான் நீங்கள் காதலித்தீர்களா? அப்புறம் அவன் என் காசை புடிங்கிட்டான், ஏமாற்றி விட்டான் என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி புலம்புவது எதற்கு என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
மேலும் பெண்கள் எல்லாம் மனசில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சினிமாவில் காட்டுவது போல இயல்பு வாழ்க்கையில் நடக்க முடியுமா? மேலும் கெட்ட ஆண்களை திருத்தி ஒழுங்குபடுத்த முடியுமா? பல பெண்களை காதலித்து ஏமாற்றியவன் உண்மையாக காதலித்தவனை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் அது ஒர்க் அவுட் ஆகாது.
எனவே ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொள்வது போல நீங்களே புதைக்குழியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எவ்வளவோ நல்ல பைசக இருக்காங்க.. அவர்களை விட்டு விட்டு ஏன் இப்படி கேடு கெட்ட ஆண்களை தேடி அலைகிறீர்கள்.
மேலும் திருத்துவது பெண்கள் வேலை இல்லை என்று செருப்படி பதிலை தருவது போல பெண்களுக்கு அட்வைஸ் செய்திருக்கக் கூடிய வகையில் பனிமலர் பன்னீர்செல்வம் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி பெண்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஒரு முறை நீங்களும் அந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பதை எளிதில் புரிந்து விடும்.