பெப்ஸி உமாவின் வீட்டுக்கு வந்த மர்ம பார்சல்..! உள் இருந்ததை பகிர்ந்த உமா அச்சத்தில் உறைந்த ரசிகர்கள்..!

90-களில் இளைஞர்களின் கிரஷ்சாக இருந்த பெப்சி உமாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இதற்குக் காரணம் தமிழ் சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை புரிந்தவர் பெப்சி உமா.

இன்று வரை இவரது சாதனையை யாரும் முறியடிக்க வில்லை என்று கூறலாம். அந்த வகையில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமான நபராக மாறியவர்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அழகான தமிழ் உச்சரிப்போடு ஹோம்லி லுக்கில் இருப்பதை பார்த்து, அனைவரும் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று எப்போதும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் திரை பக்கமே காணவில்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போதும் அவற்றையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

இதனை அடுத்து அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய உமா ஒரு ஷாக்கிங் தகவல்களை ரசிகர்களுக்கு முன் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

பெப்சி உமாவிற்கு மதுரையில் ஒரு தீவிர ரசிகை இருந்ததாக கூறிய அவர், அந்த ரசிகை இவருக்கு ஒரு பார்சலை வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தாராம். அந்த பார்சலை இவர் திறந்து பார்க்கும் போது தான் மிகப் பெரிய அதிர்ச்சி இவரிடம் ஏற்பட்டது எனக் கூறினார்.

இந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன என்று நீங்கள் யூகித்தாலும் அதற்கு உரிய விடையை நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

அப்படி என்ன பார்சலில் இருந்தது என்று அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். உண்மையில் அந்த பார்சலுக்குள் இருந்தது ஒரு வெட்டப்பட்ட சுண்டு விரல் தான். இந்த வெட்டப்பட்ட சுண்டு விரலை பார்த்து பதறிப்போன பெப்சி உமா, இந்த சம்பவம் அவருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

மேலும் தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்பதால் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து விட்டதாக சிரித்த முகத்தோடு கூறி இருக்கிறார். இவர் கூறிய இந்த ஷாக்கிங் தகவல் தான் தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

குருவுக்காக கட்டை விரலை தந்த ஏகலைவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு ரசிகை இப்படி சுண்டு விரலை பெப்சி உமாவுக்கு கொடுத்த கதையை தற்போது அவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டதாக ரசிகர்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *