Connect with us

News

பிலீவர் அடி.. பிலீவர் அடி.. மொத்தமாக காட்டி.. சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

By TamizhakamJuni 18, 2024 6:35 PM IST

சினிமாவில் அறிமுகமான இரண்டு திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்ற நடிகை பூனம் பஜ்வா. ஹிந்தியில் பல திரைப்படங்களில் முயற்சிகள் செய்த பிறகு அங்கு வாய்ப்புகளுக்கு அதிக போராட்டம் இருப்பதை அறிந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவை நோக்கி வந்தார் பொதுவாகவே பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது கொஞ்சம் அதிகமாக இருந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அங்கே மாடலிங் துறை கொஞ்சம் பெரிய துறையாக இருந்து வருகிறது. இதனால் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளை செய்ய தொடங்குகின்றனர்.

ஹிந்தியில் போட்டி:

இதனால் போட்டிகளும் அதிகமாக இருக்கின்றன. இந்த நிலையில்தான் வட இந்திய நடிகைகள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்புகளை தேடுகின்றனர். அப்படித்தான் பூனம் பஜ்வாவும் தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்புகளை பெற்றார்.

அவருக்கு தமிழில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த தம்பிக்கோட்டை, தெனாவட்டு போன்ற திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. அதன் பிறகு சில வருடங்களிலேயே பூனம் பஜ்வாவிற்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் கொஞ்சம் முயற்சி செய்து வந்தார் பூனம் பஜ்வா. மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி பூனம் பஜ்வாவிற்கு மீண்டும் ஆம்பள திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் நடனமாட வாய்ப்புகள் பெற்று கொடுத்தார்.

வாய்ப்பு கொடுத்த இயக்குனர்:

அதன் பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பூனம் பஜ்வாவை நடிக்க வைத்தார். அதற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது பூனம் பஜ்வாவிற்கு பெரிதாக கிடைக்கவில்லை.

குப்பத்து ராஜா என்கிற திரைப்படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த நிலையில் மற்ற நடிகைகளை போலவே தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருவதற்கும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார் பூனம் பஜ்வா.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். அவர் நடித்த திரைப்படங்களில் கூட அவ்வளவு கவர்ச்சியை பார்க்க முடியவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் எல்லாம் அதிகமாக டிரெண்டாகி வருகின்றன. இதனை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் நம் பூனம் பஜ்வாவா இது என்று கூறி அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top