தமிழ் சினிமாவில் தற்சமயம் எந்த ஒரு கேரக்டரிலும் தயங்காமல் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஆண்ட்ரியா.
நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார் இந்த படத்தில் இவருடைய அற்புதமான நடிப்பினால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.
பிறகு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த படம் வெளியான போது இந்த படத்தைப் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லாத காரணத்தால் இந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் இவருக்கு ஒரு பெண் ஆராய்ச்சியாளர் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த கதாபாத்திரம் மிகவும் வலிமையான ஒரு பெண். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஆண்ட்ரியா அந்த கேரக்டரில் முழு மனதோடு நடித்திருந்தார்.
பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஆண்ட்ரியாவிற்கு வந்த வண்ணம் இருந்தன விஸ்வரூபம் 2 தரமணி சர்க்கார் போன்ற வெற்றி படங்களிலும் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.
இவருக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் இருக்கிறது என்றால் மிகை ஆகாது இவர் நடிப்பில் மட்டுமல்லாது நிறைய பாடல்களையும் பாடியுள்ளார் தொடக்க இவரது முழு நேர பாடகியாக பணியாற்றி வந்தார். இதற்குப் பிறகு தான் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் தங்க சிலை போல தகதகவென மின்னுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடங்க படியுங்கள்.