‹பக்காவா பேசிகிட்டு இருந்தேன் நீ திடீர்னு பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே› லவ் டுடே என்ற படத்தில் வசனம் குறித்து பார்த்திபன் தற்சமயம் பிரதீப் ரங்க நாதனை விலாசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு வெளியான ‹கோமாளி› திரைப்படத்தில் சர்ச்சைக்குள்ளான பிரதீப் ரங்கநாதன் இந்த படம் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு கதை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார் பார்த்திபன்.
இந்தப் படம் இந்த படத்தின் கதை என்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவருடைய கதை ஆகும் என்று பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டை வைத்தார். இதன்பிறகு சர்ச்சைக்குள்ளான இந்த படம் ஒரு வழியாக சமாதானத்தில் பேசி முடித்து படம் சிறப்பாக வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் பிரதிப் ரங்கநாதன் 2022-ல் ‹லவ் டுடே› என்ற திரைப்படத்தை வெளியாகி இருந்தது. தமிழ்நாடு முழுவதும் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்து நூறு கோடியை எட்டியது இதனுடைய கலெக்சன். இந்நிலையில் இந்த படத்தை பார்த்திபன் முதல் முதலாக தியேட்டரில் சென்று பார்க்கையில் அதில் ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அந்த வசனம் ‹பக்காவா பேசிக்கிட்டு இருந்த நீ திடீர்னு பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே› என்று ஒரு வசனம் இருந்தது இந்த வசனத்தை முதலில் பார்த்திபன் கேட்டதும் சிரித்து விட்டார்.
பிறகு அந்த வசனத்தில் உள்ள உள்நோக்கம் பார்த்திபனை ஒரு பைத்தியக்காரன் என்று சொல்வது போல் அமைந்ததால் பார்த்திபன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதீப் ரங்க நாதனை பற்றி கூறியுள்ளார். நான் கோமாளி படத்தில் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தேன் என்று நினைத்து அவர் இந்த வசனத்தில் என்னை சிறுபிள்ளைத்தனமாக காட்சிப்படுத்தியுள்ளார் என்று பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதீப் ரங்கநாதன் பற்றி கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது பார்த்தி பார்த்திபனுக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் இடையே இவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருக்கிறதா என்று ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result