பிரியா ஹெக்டே,(Priya Hegde) அழகான நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையிலும் இருந்து வருகிறார். இவர் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, தெலுங்கில் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில், ‘ஜியில்கா’ என்ற படத்தில், பிரியா ஹெக்டே அறிமுகமானார். இதுவே, அவருக்கு முதல் படம். அடுத்து மணி சங்கர், டகல் பாஜிலு ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில், வரவேற்பை பெற்றார். கடந்த 2022ம் ஆண்டில் வெளியான ‘நுவே நா பிராணம்’ என்ற தெலுங்கு படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்து, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.
Priya Hegdeகர்நாடகா மாநிலம் உடுப்பியில், 1994ல் பிறந்தவர். இவரது பெற்றோர் ஹெக்டே – சாரதா ஆகியோர். பிரியா ஹெக்டேவுக்கு, பூர்ணிமா ஹெக்டே பானு பிரியா ஹெக்டே என்ற 2 சகோதரிகள் உள்ளனர். இவர் பிஇ பட்டதாரியாக உள்ளார்.
மங்களூருவில் படித்து, டிகிரி முடித்தவர். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மாடலிங் துறைக்கு வந்தார். பின், சில விளம்பர படங்களில் நடித்து அதன்பின் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவரை வரவேற்றது, கன்னட சினிமா.
அதன்பின் தெலுங்கில் சில படங்களில் நடித்தார். கிரேஸி பெலோ, ஒடேலா ரயில் நிலையம் போன்ற தெலுங்கு படங்களில், இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
Priya Hegdeபிரியா ஹெக்டே இப்போது, தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். வயது 30 ஐ கடந்துவிட்ட நிலையில், சினிமா வாய்ப்புகளை மட்டுமே நம்பிக்கொண்டு, காலத்தை, இளமையை, அழகை, நடிப்பு திறனை வீணாக்கி விடக்கூடாது என்பதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்கு, பிரியா ஹெக்டே வந்துள்ளார்.
பல அழகான நடிகைகளின் நிலையும் இதுதான். சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், சினிமாவில் மார்க்கெட் இழந்துவிட்ட நிலையில், டிவி சீரியல் பக்கம் வந்துவிடுகின்றனர். அதே கேமரா, அதே நடிப்பு, சினிமாவில் மொத்த சம்பளம், டிவியில் நடித்தால் தினந்தோறும் சம்பளம் என்ற நிலையில், வருமானம் கருதியும், நிரந்தர வாய்ப்பாக இதையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
Priya Hegdeஅதனால் பிரியா ஹெக்டேவும் சீரியல் நடிகையாக மாறி விட்டார். தேஜஸ்வினி கவுடா அர்ச்சனா ஆனந்த் நடித்து வரும் ‘கேர் ஆப் அனுசுயா’ தெலுங்கு சீரியலில், பிரியா ஹெக்டேவும் முக்கியமான கேரக்டரில் இப்போது நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் பிரியா ஹெக்டே, அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், இப்போது கார் அருகே நின்றுகொண்டு உடல் கவர்ச்சியை மாடர்ன் உடையில் தூக்கலாக காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
Priya Hegdeநீல நிற மாடர்ன் .உடையில், காரில் சாய்ந்தபடி கையை தலையில் ஸ்டைலாக வைத்து அவர் கொடுத்திருக்கும் போஸ், இப்போது டிரண்டிங் ஆகி வருகிறது. கார் அருகே ஒரு நீல தேவதை வீற்றிருக்கிறாள் என, ரசிகர்கள் கமெண்ட் செய்து, லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result