என்னோட கணவருடன் இது தான் பிரச்சனை.. முதன் முறையாக போட்டு உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே..!

திரை உலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு இருக்கக்கூடிய மௌசை போலவே தற்போது சின்னத்திரைகளில் பணியாற்றும் வி ஜேக்களுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பணியாற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தன் வாழ்க்கையில் தனக்கு நடந்த கல்யாண வாழ்க்கையில் அனுபவித்த சங்கடங்கள் குறித்து கண்கலங்கி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே..

எப்போதும் விஜய் டிவியில் சிரித்த முகத்தோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய பிரியங்காவின் வாழ்க்கையில் இவ்வளவு இடியாப்பம் சிக்கலா? என்று கேட்கக்கூடிய வகையில் அவரது திருமண வாழ்க்கை பற்றிய பகிர்வு இருந்தது.

விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளில் இடம் பிடிக்கும் தொகுப்பாளிணியான பிரியங்கா ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் தொகுப்பாளினி. இவர் எதை பண்ணினாலும் சிரிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இவர் பின்னால் உள்ளது.

இதையும் படிங்க: மோசமான கமெண்ட்.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த அதிரடி பதிலடியை பாத்தீங்களா..?

பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய அதே கனவுகளும் ஆசையும் தான் பிரியங்காவிற்கும் திருமணத்தின் போது இருந்ததாக அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை..

மேலும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தான் பரபரப்பாகி உள்ளது விஜே அர்ச்சனா தன்னுடைய யூடியூப் சேனலில் தொடங்கி இருக்கும் அவளும் நானும் என்ற நிகழ்ச்சிகள் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொண்டு இருக்கிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியங்கா சில தனிப்பட்ட பர்சனல் விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய லைப்பில் சில சந்தோஷங்கள் வேணும் என்று ஆசையாக உள்ளது என கூறியிருக்கிறார்.

உண்மையை வெளிப்படையாய் பகிர்ந்த பிரியங்கா..

அது மட்டுமல்லாமல் தன்னை யாரையாவது பயங்கரமாக லவ் பண்ண வேண்டும். அதற்கு அப்புறம் பிள்ளை பெத்துக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையா இருக்கு.. ஆனா என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்பதை வெளிப்படையாக பகிர்ந்தார்.

அத்தோடு இனிமேல் நான் எடுக்கக்கூடிய முடிவுகள் என் லைப்பில் என் அம்மாவை எந்த விதத்திலும் பாதிக்காத படியும் வருத்தப்படாத படியும் இருக்க வேண்டும் என கூறியதோடு அவர் போட்டு வைத்திருக்கக் கூடிய பிளானில் ஒவ்வொரு விஷயத்திலும் நிறைவேற்றி வருகிறேன் என்பதையும் தெரிவித்தார்.

கூடவே ஆரம்பத்தில் பிக் பாஸ்க்கு போக வேண்டும் என்று நினைத்தேன். அது போல் போனேன் கார் வாங்குவது மாடி வீடு கட்டுவது என ஒவ்வொன்றும் நான் நினைத்ததை அடுத்து அப்படியே நிறைவேற்றி வருகிறேன்.

இப்ப கொஞ்ச நாளா ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கும் வயது ஆகிக்கொண்டே போகிறது ஒரு குழந்தை பெத்துக்க வேண்டும் என்று ஆசை இருக்கு.

இதையும் படிங்க: அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

என் தம்பி குழந்தையை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அந்த குழந்தையோடு விளையாடும் போது நிம்மதியாக உணர்கிறேன். அவள் தான் என் சந்தோசம். அந்த குழந்தைக்காக நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்.

கடவுள் தான் எனக்கு அந்த குழந்தையை அனுப்பி வைத்திருக்கிறார். அவளை பார்க்கும் போது என்னை பார்க்கிற மாதிரியே இருக்கும் என எமோஷனலாக பேசியிருக்கக் கூடிய பேட்டி இணையத்தில் தற்போது வைரலாக மாறிவிட்டது.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …