Connect with us

News

VJ பிரியங்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் கஷ்டங்கள்..!

By TamizhakamJanuary 17, 2024 3:17 PM IST

விஜய் தொலைக்காட்சியில் இவர் இல்லாமல் நிகழ்ச்சிகளை இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக இருக்கும் VJ பிரியங்கா தேஷ் பாண்டே முதல் முதலாக ஒல்லி பெல்லி என்ற  நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரியானார்.

இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவரை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சென்றது. மேலும் இவர் ஸ்டார்ட் மியூசிக், தி வாள் போன்ற நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சென்னைக்கு குடியேறிய இவர் எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இவரது தோழி இவருக்கு ஆங்கரிங் வாய்ப்பை ஒரு மாதத்திற்கு விட்டு தந்திருக்கிறார். இதனை அடுத்து முதலாக ஜீ தமிழில் அழகிய பெண்களே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மேலும் வெறும் 600 ரூபாய்க்காக ஐபிஎல் இல் ப்ரமோட்டராக பணியாற்றியிருக்கும் பிரியங்கா தேஷ் பாண்டே மைக்கை தொடக்கூடாது என்று கூறியதை அடுத்து எப்படியும் இந்த துறையில் நாம் சாதிக்க விட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

ஆரம்ப கட்டத்தில் இவருக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் சுட்டி டிவியில் பணி புரிந்து இருக்கிறார். இந்த சமயத்தில் மாகாபாவின் மூலம் விஜய் டிவியில் வேலை கிடைத்தது.

இதனை அடுத்து தனது உற்ற தோழனாகவும், குருவாகவும் மாகாபாவை கருதுகிறார்.  அடுத்து சிறந்த பெண்களுக்கான தொகுப்பாளினி விருதை இவர் பெற்றிருக்கிறார். எம்பிஏ பட்டப்படிப்பையும் முடித்திருக்கக்கூடிய பிரியங்காவின் வாழ்க்கையில் திருமணம் ஒரு மிகப்பெரிய போராட்ட களமாக இருந்துள்ளது.

பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்து இருக்கிறார். விவாகரத்து பெற்றுவிட்டார், கர்ப்பமாக இருக்கிறார் என்பது போன்ற கிசு கிசுக்கள் அடிக்கடி வெளி வந்தது.

இதனை அடுத்து பிரியங்கா தற்போது வரை பிரவீனோடு இணைந்து வாழ்வதாக அவரே கூறி இருக்கிறார். பிரவீனை காதலித்திருந்தாலும் பெற்றோர்களுடைய சம்மதத்தோடு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

எனக்குள் எவ்வளவு சங்கடங்களும், சோகங்களும் இருந்தாலும் எனது தம்பியும் என்று ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பதற்கு காரணம் எனது அம்மா தான் என்று கூறி இருக்கிறார். இந்த சமயத்திலும் தனது சங்கடத்தை வெளிப்படுத்தாத பிரியங்கா எப்போதும் சிரித்த வண்ணமாக தான் இருப்பாராம்.

இதற்காக அவருக்குள் எப்போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கிக் கொண்டே இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆங்கரிங் செய்யக்கூடிய நபர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, மற்றவர்கள் கூறும் நெகட்டிவ் கமாண்டுகளை காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

மேலும் தன்னோடு இணைந்து பணியாற்றும் கோ ஆங்கரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இவரது வாழ் நாள் லட்சியமாக மிகப்பெரிய சினிமா நிகழ்வுகளை ஆங்கரிங் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top