சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் ( Priyanka Jain ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ‘காற்றின் மொழி’ என்ற சீரியலும் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ராஜா ராணி சீரியலின் ஹீரோ சஞ்சீவ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியானார் பிரியங்கா ஜெயின். அமெரிக்க ரிட்டர்னான சஞ்சீவ், கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகி பிரியங்கா இருவருக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்த சீரியல் உருவாகி வருகிறது.
கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா. இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : “டீசர்ட்டை தூக்கி.. தொப்புளை காட்டி..” – டாக்டர் பட நடிகை பிரியாங்கா-வா இது..? – ரசிகர்கள் ஷாக்..!
ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில். ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார்.
இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.சீரியலில் தாவணி பாவாடை சகிதமாக தோன்றும் பிரியங்கா எம் ஜெயின் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்த போது எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றன.
இதையும் படிங்க : ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ஸ்லீவ்லெஸ் உடையில் “டாக்டர்” பிரியங்கா மோகன்..!
இந்நிலையில் பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்தவர்கள், அந்த நபரை பிரியங்கா காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார் எனவும் கூறுகிறார்கள். உண்மையை பிரியங்கா தான் சொல்ல வேண்டும்.
மேலும், சீரியலில் தாவணி, பாவாடையில் தோன்றும் ப்ரியங்காவா இது..? – வாயை பிளந்து வருகிறார்கள் இன்னொரு தரப்பு ரசிகர்கள்.
Loading ...
- See Poll Result