நடிகை பிரியங்கா மோகன், (Priyanka Mohan)தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அழகான நடிகைகளில் ஒருவர். நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார். காமெடி கலந்த ஆக்சன் படமான இந்த படம், வெற்றி பெற்றது. ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
டாக்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்தார். இந்த படம், பெரிய அளவில் பேசப்படவில்லை. அடுத்து, நடிகர் சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெறவில்லை.
கேப்டன் மில்லர் படத்தை அடுத்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக, அவரது 30வது படத்தில் நடிக்கிறார். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்திலும், பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
சினிமா நடிகை, சீரியல் நடிகைகளை பொருத்த வரை அழகும், இளமையும் தான் அவர்களது தொழிலுக்கு மூலதனம். அழகாக காட்சியளிக்கும் வரை மட்டுமே, ஹீரோக்களுக்கு ஜோடியாக டூயட் பாடி ஆட முடியும். அழகு போய்விட்டால் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க கூட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஏனெனில் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கவும் அவர்கள் எதிர்பார்க்கும் அழகு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் பிரியங்கா மோகன், தனது அழகான முக அழகு பராமரிப்புக்கான சில டிப்ஸ் களை கூறியிருக்கிறார். இது அவரது அழகின் ரகசிய குறிப்புகள் என்றாலும், அதை மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள இந்த அழகு குறிப்புகளை தந்திருக்கிறார்.
Priyanka Mohanநடிகை பிரியங்கா மோகன் தனது பால் போன்ற சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் போது இந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார். முகத்தில் படியும் அழுக்கை சுத்தம் செய்வது முதலில் முக்கியம். தோல் பராமரிப்பில் வழக்கமான முதல் விஷயமாக நன்கு பொருந்திய க்ளென்சர் மூலம் அழுக்குகளை அகற்றுகிறார்.
தோல் அழுக்குகளை சுத்தப்படுத்திய பிறகு, அது அவரது தோலை சமன் செய்து முதல் தோற்றத்தை அளிக்கிறது. அடுத்து முகத்தின் தோலை ஈரப்பதமாக்க வேண்டும்.
Priyanka Mohanஅடுத்த படியாக, தோலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை இவ்வாறு பயன்படுத்துவது மிக முக்கியம். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது சருமத்தை கவனித்துக்கொள்வது, பாதுகாப்பது மிகவும் அவசியம்.
இப்போது கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தோலில் வயதான மற்றும் சருமத்திற்கு மந்தமான தன்மையை ஏற்படுத்தும். வழக்கமான முகத்தில் கெட்டியாக பூசப்படும் பேஸ் பேக், பஜார் கடைகளில் கிடைக்கிறது. முகத்தில் கவசமாக பூசப்படும் மாவு பொருட்கள், கிரீம்களுக்கு பதிலாக பளபளப்பான சருமத்திற்காக இயற்கையான மற்றும் வீட்டு மூலப்பொருளில் தயாரிக்கப்பட்டவைகளை மட்டுமே பயன்படுத்துகிறார்.
Priyanka Mohanரோஸ் வாட்டருடன் முகம் மூடுபனியாக செயல்பட்டு, ரோஸ் வாட்டர் சருமத்திற்கு இன்றியமையாத டோனராகும், இது சருமத்தின் சிவப்பைக் குறைக்கிறது. வைட்டமின் சி.
வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்து அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.எனவே, இந்த முறைகளை பின்பற்றி வரும் நிலையில், தனது முகப்பொலிவு சிறப்பாக இருப்பதால், அதுபற்றிய அழகு குறிப்புகளை பிரியங்கா மோகன் தந்திருக்கிறார்.
Priyanka Mohanபியூட்டி பார்லருக்கு போய் ரோலிங் சேரில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டால், என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை. பல ஆயிரக்கணக்கில் இதற்காக பணம் செலவிடுகிறோம். பிரியங்கா மோகன் தந்துள்ள அழகு குறிப்புகளையும் பாலோ அப் பண்ணி பார்க்கலாமே என, ரசிகர்கள் பலரும் கமெணட் பாக்சில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு,. தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result