Connect with us

News

“க்யூட்டு பொண்ணு. ஹாட்டு கண்ணு..” – விருது விழாவில் இளசுகளை சுண்டி இழுத்த பிரியங்கா மோகன்..!

By TamizhakamSeptember 14, 2022 12:45 AM IST

பிரியங்கா மோகன் : பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்ட நடிகைகள் நம்பர் ஒன் நடிகை என்ற விஷயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை நாங்கள் நடிக்கிறோம்… ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. அவ்வளவுதான் என்று கூறுவார்கள்.

ஆனால் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஓட்டப்பந்தயத்தில் இருக்கும் நடிகைகளிடம் கேட்டால்தான் அந்த நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்து எவ்வளவு பெரியது என்று தெரியவரும். ஆனால், சில நடிகைகளுக்கு இயற்கையாகவே இந்த அந்தஸ்து கிடைத்து விடும்.

அந்த வகையில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி சிட்டாக பறந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் தற்போது ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாராவாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், காலம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக பறந்து வரும் ஒரு நடிகை என்றால் அது பிரியங்கா மோகன்தான் என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மட்டுமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நம்முடைய எண்ணங்கள்தான் நம்மை அழகாகும்.. மற்ற மொழி படங்களை விட என்னுடைய தாய் மொழி தமிழ் என்பதும் தமிழ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிக சம்பளம் பெறும் நடிகை அல்லது நம்பர் ஒன் நடிகை என்ற இலக்கை அடைவது என்னுடைய குறிக்கோள் கிடையாது.

நல்ல படங்களில் நடித்தால் போதும்.. வெற்றி தோல்வி எதுவானாலும் ஒருவர் மீது மட்டுமே குற்றம் சுமத்த முடியாது. அப்படி சுமத்துவதும் சரியாக இருக்காது. சிறுவயதிலிருந்தே எனக்கு அரசியல் ஆசை கிடையாது. எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசித்து செய்ய வேண்டும் என்ற ஒரு பக்குவம் என்னிடம் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா சைமா விருது விழாவில் பங்கேற்ற அவர் அங்கே கவர்ச்சி உடையில் தோன்றினார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த க்யூட் பொண்ணு ஹாட்டு கண்ணு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top