Connect with us

News

ரொம்ப ஓவர்.. இதுக்கு மேல என்னால முடியாது.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பிரியங்கா..!

By TamizhakamAugust 10, 2024 7:43 PM IST

தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. பிரியங்கா நல்காரியை பொருத்தவரை தமிழில் அவர் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் எடுத்த உடனே சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை.

தொடர்ந்து செய்த பல முயற்சிகளின் காரணமாகதான் பிறகு சீரியல்களில் வரவேற்பை பெற்றார் பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் அதிக வரவேற்பை பெற்று வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி.

சீரியல் நடிகை பிரியங்கா..

அதற்கு பிறகு தமிழில் அதிக சீரியல் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்த அவர் ரோஜா சீரியலின் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் 2018 ஆம் ஆண்டு தொடங்கிய ரோஜா சீரியல் 2022 வரை ஒளிபரப்பாகி வந்தது.

ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த பிரியங்கா நல்காரி சன் டிவி ஆடியன்ஸ் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த நிலையில்தான் ராகுல் என்பவரை காதலித்து வந்தார் பிரியங்கா நல்காரி. ராகுல் வெளிநாட்டில் பிசினஸ் செய்து வரும் முக்கிய நபராக இருந்து வந்தார்.

இதுக்கு மேல என்னால முடியாது..

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சிம்பிலாக திருமணமும் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர் சீதாராமன் என்கிற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் சீதாராமன் சீரியல் பாதியிலேயே நின்று போனது. இதற்கு என்ன காரணம் என்று அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தது.

பிரியங்கா நல்காரி கணவருக்கு அவர் சீரியல் நடிப்பதில் விருப்பமில்லை அதனால்தான் பிரியங்கா சீரியலில் நடிக்கவில்லை என்று இது குறித்து அப்போது பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதற்கு பிறகும் அவர் நல தமயந்தி என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்சமயம் தொடர்ந்து ஜீ தமிழில் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக பிரியங்கா நல்காரி இருந்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் லைவில் பேசினார் பிரியங்கா நல்காரி. பொதுவாகவே இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் இவர்.

விவாகரத்து

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் சிங்கிளா என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளிக்க பிரியங்கா நல்காரி ஆமாம் என்று பதில் அளித்து இருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அப்படியென்றால் அவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என்று சர்ச்சைகளை துவங்கியிருக்கின்றன.  ஏனெனில் ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் ஒரு பேச்சு இரண்டு வந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் தற்சமயம் பிரியங்கா நல்காரி இப்படி ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து இவர்களுக்கு ஏன் விவாகரத்து ஆனது என்பதுதான் இப்பொழுது கேள்வியாக இருந்து வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top