இஸ்லாமிய பெண்.. சிவகார்த்திகேயன் ஜோடி.. ஏமாற்றிய புருஷன்.. ஒரே மகன்.. சிறகடிக்க ஆசை Rohini பற்றி தெரியுமா.?

சின்னத்திரை சீரியல்கள் அதிகளவு தற்போது இல்லத்தரசிகளின் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக திண்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை .

இந்த சீரியலில் நடித்து வரும் ரோகிணியின் கேரக்டர் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் ரோகினியாக நடிக்க கூடியவர் யார் அவரது மறுபக்கம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சல்மா அருண்..

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிரக்கூடிய வகையில் மக்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்படும் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் மிகச்சிறந்த கேரக்டரான ரோகினியின் உண்மையான பெயர் சல்மா அருண் என்பதுதான். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்.

இதையும் படிங்க: விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரணம் இது தான்.. பகீர் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்..

ஆரம்ப காலங்களிலேயே மாடலிங் துறையிலிலும் மீடியாவிலும் சாதிக்க வேண்டும் என்று அதிகளவு ஆர்வம் கொண்டு இருந்தவர். இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்திருக்க கூடிய இவர் பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி..

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நம்ம வீட்டு பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலிலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இவர் திருமணமாகி ஒரு குழந்தையோடு இருக்கிறார் என்றால் பலருக்கும் அது ஆச்சிரியத்தை ஏற்படுத்தும்.

சீரியலில் ரோகினியாக நடித்து வரும் நடித்துக் கொண்டிருக்கும் கல்யாணியாக இருந்தாலும் இவர் நிஜத்தில் ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர். ஆரம்ப நாட்களில் அரசாங்க விளம்பரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் இவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய இவர் துணை கேரக்டர் ரோல் என்றாலும் அதை சீரும் சிறப்புமாக செய்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குழந்தை மற்றும் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாக மாறி ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இநற்கு காரணம் இவர் தனது கணவரை மிகச் சிறந்த தந்தை என்று கூறியிருப்பது தான். பத்து வருடங்களாக இவர்கள் வாழ்க்கை காதல், சிரிப்பு, மகிழ்ச்சி என்று நகர்ந்து வருவதாக கூறியிருப்பது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் பெற வைத்துள்ளது.

இதை எடுத்து தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் இவரின் மறுபக்கத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவரது நடிப்புக்கு பாராட்டுதல்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. அரைகுறை ஆடையில் அசர வைக்கும் அட்டகத்தி நந்திதா..

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …