இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. IRFAN மாதிரி ஒரு WORST பாத்ததே இல்ல.. ரஞ்சித் மனைவி பகீர் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை ரஞ்சித்தின் மனைவி மிக நேர்த்தியான முறையில் விளக்கியதோடு வாய்ப்பு அனைவருக்கும் சமமான முறையில் கொடுத்தால் தான் வளர்ச்சி அடைய முடியும் என்பதை கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவி மற்றும் புரொடக்ஷன் சைடில் MANIMEGALAI-க்கு எந்த விதமான ஆதரவும் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிப்படுத்தி மொத்தமாக மணிமேகலையை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க..

மக்களை மகிழ்விக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை முடித்து விட்ட நிலையில் தற்போது ஐந்தாவது சீசனில் விஜய் பிரியங்கா பிரபல youtuber இஃப்ரான் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இந்த நிகழ்ச்சியை விஜே மணிமேகலை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதில் மணிமேகலை பிரியங்காவின் ஜூனியராக நினைத்துக் கொண்டு தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து விஜே மணிமேகலை தன் பாணியில் பணி செய்ய விடாமல் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து இருக்கிறார் பிரியங்கா.

அதுமட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் ஷோவை விட்டு வெளியே போ என்று கூறிய விஷயம் ஆடியோவாக தற்போது வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அண்மை பேட்டியில் ரஞ்சித் மனைவி மிக நேர்த்தியான முறையில் அங்கு நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

இதில் மணிமேகலையை பணி செய்ய விடாமல் பிரியங்கா டாமினேட் செய்தது மிகவும் தவறான ஒன்று என்றும் தொடர்ந்து பிரியங்காவிற்கு அனைவரும் அடங்கிப் போக வேண்டும் என்ற சூழ்நிலை தான் உள்ளது என்பது போல அவரும் சொல்லிய விஷயம் அதிர்ச்சியை தந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ப்ரொடக்ஷன் ஹவுஸே பிரியங்காவை சமாதானம் செய் அவர் சொல்வதைக் கேட்டு நட என்பது போல் மணிமேகலைக்கு அறிவுரைகளை சொன்னது மேலும் சந்தேகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

IRFAN மாதிரி ஒரு WORST பாத்ததே இல்ல..

அத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இப்ரானை பற்றி பேசும் போது இவர் இந்த சமையல் போட்டியில் நடந்து கொண்ட விதத்தை கடுமையாக சாடி இருக்கிறார். டேபிளை தட்டுவது ஒரு மாதிரியாக பேசுவது என இவரும் ஒரு டாமினேஷன் ஐகான் போல் இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்ரானை போல் ஒரு worst ஆளை இது வரை நான் பார்த்ததே கிடையாது. அந்த அளவுக்கு கீழ்த்தரமாக இவர் நடந்து கொண்டார். மேலும் பிரியங்காவை காக்கா பிடித்து வைத்திருந்த காரணத்தால் தான் இவரை தம்பி என்றும் இவர் அக்கா என்றும் ஷோவில் நடந்து கொண்ட விதம் என்னை முகம் சுளிக்க வைத்தது.

பிரியங்கா சொன்னால் தான் எல்லாம் என்பது போல இவரும் செயல்பட்டுவதை பார்த்து ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். விஜய் டிவிக்குள் பாலிடிக்ஸ் இருக்கலாம். ஆனால் பாலிடிக்ஸே விஜய் டிவியாக இருந்தால் எப்படி என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் மூலம் பிரியங்கா நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றிருந்தாலும் அது போகப் போக ஒரு கட்டத்தில் மாறியது. ஆனால் தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் இவருக்கே கொடுத்திருக்கிறார்கள் என்றால் எதற்காக ஒரு ஷோ நடத்த வேண்டும் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

டைட்டிலை வென்ற கையோடு வெளிநாட்டுக்கு பறந்து இருக்கக்கூடிய பிரியங்காவிற்கு, பிரியங்கா வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பணியாற்றிய டிடி விட்டுக் கொடுக்காமல் இப்படி இருந்தால் இந்த நிலையை எட்டி இருக்க முடியுமா.

ரஞ்சித் மனைவி பகீர் தகவல்..

ஒரே சேனலில் 15 வருடமாக தொடர்ந்து அட்டை போல் ஒட்டிக்கொண்டு இருக்கக்கூடிய இவருக்கு திறமை இருந்தாலும் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதா.

ஜூனியர் சீனியர் என்று போட்டி போடும் இடத்தில் கூட பொசசிவ்வாக தன் ஆளுமையை காட்ட வேண்டுமா. தற்போது மணிமேகலைக்கு ஆதரவாக பல விஜேக்கள் இணைந்து பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் பிரியங்கா வால்தான் தங்களது கேரியர் வீணாக போய்விட்டதே என்பதை ஓபன் ஆக தெரிவித்து விட்டார்கள்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …