கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் வளர்ந்து வரும் நடிகைகளின் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார்.
தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்த காரணத்தினால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிக அளவு ஆனது.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் படு பிஸியாக தளபதி விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் ரசிகர்களின் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய படங்களின் வரிசையில் இது ஒன்றாக தற்போது உள்ளது. ஏனென்றால் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பின்னால் இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
விஜய்யுடன் அனைத்து நடிகைகளும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவருக்கு இந்த வாய்ப்பு மிக எளிதாக தமிழில் இரண்டாவது படத்தில் அமைந்தது இவரின் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகை ராஷ்மிகா அமிதாப்பச்சனுடன் இணைந்து «குட் பை» என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான பிரமோஷன் பணியில் இவர் மிகவும் ஆர்வமாக பணி செய்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் புரமோஷனுக்காக அவர் தற்போது ஒரு பல்கலைக்கழகத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி பாட்டுக்கு தரை டிக்கெட் லெவலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
அப்போது அவர் பிங்க் நிறத்தில் பேண்ட் கோர்ட் மற்றும் வெள்ளை கருப்பு நிறத்தில் டீ சார்ட் அணிந்த அவர் டி-ஷர்ட்டை நன்கு தூக்கி வயிற்றில் உள்ள தொப்புள் தெரியும் முடி போட்டு விட்டு மைக்கை தலைக்கு மேல் நோக்கி வைத்துக்கொண்டு ஆடிய விதம் அனைவரையும் கிறுகிறுக்க வைத்தது.
இப்போது சிரித்தபடி ஆடிய அந்த குத்தாட்டத்தை பார்த்து அனைவரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
Loading ...
- See Poll Result