Connect with us

News

“ரசிகரின் அந்த உறுப்பில் ராஷ்மிகாவின் பெயர் டாட்டூ..” ராஷ்மிகா மந்தனா கொடுத்த தடாலடி பதில்..!

By TamizhakamJuli 29, 2024 1:00 PM IST

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வரிகளின் மூலம் தமிழக இளைஞர்களை கட்டிப்போட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் கன்னட படத்தில் நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் ராஷ்மிகா மந்தானாவை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டியின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் பெங்களூருவில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் வென்றவர்.

கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து நடித்ததை அடுத்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவருக்கு பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்து சேர்ந்தது.

சமூக வலைதள பக்கங்களிலும் படுபிசியாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தானா தற்போது பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதை அடுத்து கன்னட திரை உலகில் அறிமுகமான இவர் கன்னட மொழி படங்களில் நடிக்காமல் கன்னட திரை உலகிற்கு துரோகம் செய்து விட்டதாக கன்னட திரையுலகம் இவரை ஒரு சமயம் ஒதுக்கி வைத்திருந்தது.

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

எனினும் அவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரக்கூடிய இவர் இன்னும் ஒரு சரியான வெற்றிப் படத்தை தமிழில் கொடுக்க முடியவில்லை.

ரசிகரின் அந்த உறுப்பில் ரஷ்மிகாவின் பெயரில் டாட்டூ..

இவரது instagram பக்கத்தை அதிகளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதால் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவரிடம் ரசிகர் ஒருவர் தற்போது எழுப்பி இருக்கும் கேள்விக்கு தக்க பதிலை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கக் கூடிய ராஷ்மிகா மந்தனா பதிலைப் பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள்.

அப்படி என்ன அந்த ரசிகர் ராஷ்மிகாவிடம் கேட்டிருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த ரசிகர் ராஷ்மிகா மந்தானாவிடம் அவரது பெயரை நெஞ்சில் டாட்டூவாக போட்டுக்கொள்ள ஆசையாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

ராஷ்மிகா கொடுத்த தடாலடி பதில்..

எந்த விஷயத்தை கேள்வி பட்ட ராஷ்மிகா மந்தானா அவரது கேள்விக்கு என்ன பதில் கொடுத்து இருப்பார் என்று நீங்கள் யூகித்து பாருங்கள். நீங்கள் யூகித்த பதிலும் அவர் சொன்ன பதிலும் கட்டாயமாக ஒத்துப் போகாது. ஏனென்றால் அவர் சொல்லி இருக்கும் பதிலை கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்.

அந்த பதில் அவர் சொல்லும் போது என்னுடைய பெயரால் என் ரசிகரின் நெஞ்சில் காயம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை என்று தடாலடியாக பதில் கொடுத்து அந்த ரசிகரை சமாளித்து இருக்கிறார்.

இந்த சமயோசித புத்தி எந்த நடிகைக்கு எளிதில் கிடைக்காது என்று ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைவலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top