Connect with us

News

ரவீந்தரை டன்சோ டெலிவரி பாயாக மாற்றிய அம்மா… புரட்டாசியால் வந்த சோதனை சமாளித்தாரா? – மஹாலக்ஷ்மி!

By TamizhakamSeptember 20, 2022 11:49 AM IST

இன்றுவரை வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஜோடிகளாக பெயர் பெற்று இருப்பவர்கள் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி. இவர் திருமணம் பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார் துணையோடு ஒரு கோயிலில் மிகவும் சீரும் சிறப்புமாக நடந்தது.

 திருமணத்திற்குப் பின்னால் ஏகப்பட்ட சிக்கல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை கோபப்படாமல் மிகவும் தரமான சம்பவத்தோடு பதில் அளித்து வருகிறார்கள்.

 Fatமேன் என்ற வார்த்தை தற்போது வைரலாக காரணமே  ரவீந்தர் என்று கூறலாம். அந்த அளவுக்கு இவர் உருவத்தைப் பார்த்து கிண்டலும் கேலியுமாக பேசிய அவர்களுக்கு எல்லாம் மிகவும் தக்க வகையில் பதில் பேசி இருப்பது இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

 இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று சூட்டிங் இருப்பதாக கூறி மகாலட்சுமி சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டார். எனவே மகாலட்சுமியின் மாமியார் அன்று புரட்டாசி முதல் நாள் என்பதால் அவரே மகாலட்சுமிக்கு தேவையான உணவுகள் அனைத்தையும் சமைத்து ஒரு  கேரியரில் போட்டு  மகாலட்சுமிக்கு கொண்டு கொடுக்குமாறு தனது மகன் ரவீந்தருக்கு  கட்டளை இட்டிருக்கிறார்.

இதை அடுத்து ரவீந்தரை உணவு டெலிவரி செய்து தரும் ஒரு டன்சோ ஃபுட் டெலிவரி பாயாக மாறி  தன் மனைவி இருக்கும் அன்பே வா படப்பிடிப்பு இடத்துக்கு இந்த கேரியரை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்துள்ளார் .மேலும் டெலிவரி செய்து விட்டு அவர் சொன்ன முக்கியமான வார்த்தை என்னவென்றால் திரும்ப கேரியரை வீட்டுக்கு கொண்டு வர மறந்து விடாதே அவ்வாறு தவறும்பட்சத்தில் உனக்கு அங்கு மாமியார் கொடுமை ஆரம்பிக்கும் என்று  ஜோக்காக கூறியிருக்கிறார்.

 

மேலும் அவர்கள் இருவரும் நேற்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  ரசிகர்களுக்காக  பதிவு செய்து இருக்கிறார்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான சைவ சாப்பாட்டை புரட்டாசி முதல் நாளன்று தனது மனைவிக்கு கொண்டு செல்வதற்காக அந்த உணவை தயார் செய்த தனது அம்மாவுக்கு நன்றிகளையும் கூறியிருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top