உடலுக்கு ஜீரண சக்தியை அதிகப்படுத்திக் கொடுப்பதில் ரசம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரசத்தில் பல வகையான ரசங்களை நீங்கள் சுவைத்திருப்பீர்கள்.
அதிலும் குறிப்பாக தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பூண்டு ரசம், தூதுவளை ரசம் எப்படி வகை வகையான ரசத்தை சுவைத்த நீங்கள் இப்போது மாங்காயை கொண்டு செய்யப்படும் சுட்ட மாங்காய் ரசத்தை எப்படி செய்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சுட்ட மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்
1.அடுப்பில் சுட்ட மாங்காய் ஒன்று
2.பெருங்காயம் ஒரு சிட்டிகை
3.வரமிளகாய் 3
4.பூண்டு 8 பல்
5.மிளகு அரை டீஸ்பூன்
6.சீரகம் அரை டீஸ்பூன்
7.தண்ணீர்
8.தக்காளி 2
9.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
10.கடுகு ஒரு ஸ்பூன், 11.கருவேப்பிலை ஒரு கொத்து
12.மல்லி இலை ஒரு கொத்து
13.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
14.உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் மாங்காயை எடுத்து அதன் மீது சிறிதளவு நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு அடுப்பில் சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் மிளகு சீரகம் இவற்றை போட்டு ஒன்று இரண்டாக அடித்து எடுத்து தனியாக ஒரு சட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே ஜாரில் சுட்டு வைத்திருக்கும் மாங்காயை எடுத்து அதன் தோல்களை நீக்கி தசை பகுதியை மட்டும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு அதில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு தாளிசம் செய்த பிறகு அரைத்து வைத்திருக்கும் மாங்காய் விழுது, பொடி செய்த மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு போதுமான அளவு நீர் மற்றும் உப்பினை சேர்த்து மஞ்சத்தூளையும் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
இது கொதித்து வரவதற்கு முன் நீங்கள் தக்காளியை பிளந்து அதை நன்கு நசுக்கி இந்த கலவையில் போட்டு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
ஒரு கொதி வந்த பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்து மல்லிகை போட்டு இறக்கி விடுங்கள் இப்போது சுவையான சுட்ட மாங்காய் ரசம் தயார்.
Loading ...
- See Poll Result