Connect with us

News

நிறைமாத நிலவே வா வா… வளைகாப்பு போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து மழையில் நனையும் ரித்திகா!

By TamizhakamAugust 21, 2024 9:13 AM IST

சீரியல்களின் ஹோமிலியாக நல்ல லட்சணமான முகத்தோடு பல்வேறு தொடர்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமான சீரியல் நடிகையாக இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரித்திகா செல்வி .

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

ரித்திகா செல்வி:

அந்த தொடரில் இவர் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நல்ல லட்சணமான முகத்தோடு பக்கத்து வீட்டு பெண் போலவே ரசிகர்கள் மனதில் மிகவும் எளிமையாக ஒட்டிக்கொண்டார் ரித்திகா.

இவர் சீரியல்களில் மட்டுமே இல்லாமல் எப்போதுமே ஹோம்லியாக மிகவும் டீசன்ட்டான செயலை அணிந்து தென்படுவார்.

இதனாலே இவருக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரிக்க விட்டனர். சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரித்திகா ராஜா ராணி சீரியலில் சஞ்சீவி என் தங்கையாக வினோதினி என்ற கேரக்டரில் நடித்தார்.

அதுதான் அவரது முதல் சீரியலும் கூட அந்த சீரியலிலே தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகாவுக்கு அடுத்ததாக பாக்யலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது .

அப்படித்தான் அமிர்தா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றார் ரித்திகா. ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும்போது அதிகமான ரசிகர்கள் இந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகாது என்று கூறி வந்தனர்.

வேண்டாம் என கூறி அறிவுரை செய்தனர். ஏனென்றால் இந்த சீரியலில் எப்போதுமே அழுது கொண்டிருப்பது போல தான் கதாபாத்திரம் இருக்கும் .

பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா:

அதனால் இந்த கேரக்டர் உங்களுக்கு வேண்டாம் என பலரும் அவரிடம் கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் அமிர்தாவின் கணவர் இறந்துவிட்டதால் கைக்குழந்தையோடு அவர் கஷ்டப்படுவதை பார்த்து வந்த ரசிகர்கள் இந்த கேரக்டர் வேண்டாம் எனக் கூறினார்கள்.

அதற்குப் பிறகு எழில் மற்றும் அம்ரிதாவின் திருமணம் பெரிய போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்றது. ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் அம்ரித்தா ஒரே அழுகாச்சி காட்சியாக தான் வந்து போனார்.

இதனால் இந்த சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார். இதனிடையே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிரபலமான வினு என்பவரை காதலித்து ரித்திகா திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா நடிக்க மாட்டாரா? என்ற கேள்வியை கேட்டு வந்த ரசிகர்களுக்கு ரித்திகா. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட ரித்திகா கலந்து கொண்டார்.

வளைகாப்பு புகைப்படங்கள்:

அதன் மூலம் மேலும் பிரபலமானார். இந்நிலையில் ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு அண்மையில் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்திருக்கிறார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரித்திகா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் ரித்திகா. பாதுகாப்பான முறையில் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுக்க பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top