ரிது வர்மா,( Ritu Varma )தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில், சில படங்கள் மாபெரும் வெற்றிப்படமாக, ரசிகர்களால் பலத்த வரவேற்பை பெற்றன.
ரிதுவர்மா, ‘அனுகோகுண்டா’ என்ற குறும்படத்தில் நடித்தார். ‘பெல்லி சூபுலு’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் நடித்ததற்காக, ரிதுவர்மாவுக்கு சிறந்த நடிகைக்கான நந்தி விருதும், பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.
Ritu Varmaகடந்த 1990ம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிறந்த ரிதுவர்மாவுக்கு, இப்போது 33 வயதாகிறது. ஆனால், பார்ப்பதற்கு 23 வயது பெண் போல, இளமையாக வெகு அழகாக இருக்கிறார்.
இவர்நடிகை மட்டுமல்ல, மாடல் அழகி என்பதும் குறிப்பிடத்தக்கது. பல விளம்பரங்களிலும் ரிதுவர்மா நடித்திருக்கிறார். பொறியியல் பட்டப் படிப்பை ஐதராபாத் வில்லா மேரி கல்லூரியில் படித்தவர்.
ஐதராபாத் அழகி போட்டியில் பங்கேற்று, முதல் ரன்னர் அப் விருதை பெற்றவர். கடந்த 2013ம் ஆண்டில் தெலுங்கில் பாட்ஷா. பிரேமா இஷ்க் காதால், நா ரகுமமருடு, யேவதே சுப்பிரமண்யம் பெல்லி சூபுலு, கேசவா படங்களில் நடித்த இவர், தமிழ் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
Ritu Varmaஇதில் மூன்று படங்களுமே, வெற்றிப்படங்களாக அமைந்து, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பையும், ரசிகர்கள் மத்தியில் ரிதுவர்மாவுக்கு நல்ல அறிமுகத்தையும், பெற்றுத் தந்திருக்கின்றன.
இப்போதும் சில படங்களில் நடிக்க ரிதுவர்மா கமிட் ஆகி இருக்கிறார். அதுபற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதுபோல், வெப் சீரிஸ் சிலவற்றில் நடிக்கவும் ரிதுவர்மாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக, தகவல்கள் பரவி வருகிறது. அதுபற்றிய தகவல்களும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
Ritu Varmaசோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் ரிதுவர்மா, தொடர்ந்து தனது கிளாமரான படங்களை, அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். இப்போது, நீல பின்னணியில், கடற்கரை வீடு ஒன்றில் மரப்பலகை மீது நின்றபடி ரிதுவர்மா கொடுத்திருக்கும் கவர்ச்சியான போஸ், பார்க்கும் ரசிகர்களின் மனதில் கதகளி ஆடுகிறது.
Ritu Varmaஇப்படி ஒரு மிரட்டலான கிளாமரில், ரிதுவர்மா படங்களை பார்த்த ரசிகர்கள், வியந்து போய் இருக்கின்றனர். அதுவும் தொடை, வயிறு, மார்பு பகுதிகள் பளிச்சிடும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களை திணறடித்து வருகின்றன.
இந்த புகைப்படங்கள் இப்போது, வேகமாக வைரலாகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்க, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result