எனக்கு வேண்டியதை இவர் கொடுப்பார்.. உறவு குறித்து ஓப்பனாக பேசிய ஜி.வி.பிரகாஷ் சைந்தவி..

நேற்று முதல் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்கள் முழுக்க இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றவாறு புது புதுசான கதைகளை திரித்து வெளியிட்டு வருகிறார்கள்.

நட்சத்திரங்களின் விவாகரத்து விவகாரம்:

இதனால் கோலிவுட் சினிமாவே பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. இதையடுத்து தற்போது சைந்தவி ஜிவி பிரகாஷின் விவாகரத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கி ஆட ஆரம்பித்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் முதன் முதலில் வெயில் திரைப்படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தனது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமானிடம் சிறுவயதில் இருந்தே ஓடி விளையாடி அவரிடமிருந்து தான் இசையை கற்றுக் கொண்டார்.

மேலும் இவர் “சிக்கு புக்கு ரயிலே” பாடலை குழந்தையாக இருக்கும்போதே பாடி பாடகர் ஆகவும் அறிமுகமானார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் இசையமைத்தும் இசையிலேயே மூழ்கி வளர்ந்து எழுந்து வந்த ஜிவி பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை பல வருடங்களாக காதலித்து பின்னர் தனது 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மிகச்சிறந்த பாடகியாவும் கச்சேரிகளில் பாடல் பாடுபவர்களாகவும், கர்நாடக இசை கலைஞர் ஆகவும் மிகச்சிறந்த பாடகியாக தென்பட்டு வந்தார்.

ஜிவியின் இசைக்கு உயிர் கொடுத்த சைந்தவி:

குறிப்பாக ஜிவி பிரகாஷ் திருமணம் செய்த பின்னர் சைந்தவி தொடர்ச்சியாக ஜிவியின் இசையில் வெளிவரும் பல்வேறு பாடல்களை பாடி வந்தார்.

குறிப்பாக இவர்கள் இருவரும் சேர்ந்து தெறி படத்தில் இடம் பெற்ற “என் ஜீவன்” , சூரரை போற்று படத்தில் இடம்பெற்ற “கையிலே ஆகாசம்”, கர்ணன் படத்தில் “எள்ளு வய பூக்களையே” உள்ளிட்ட பல்வேறு பாடல்களை சைந்தவி பாடி புகழ்பெற்ற பாடகியாக வலம் வந்தார்.

இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அன்வி என்ற பெண்குழந்தை பிறந்தார். குழந்தை, குடும்பம், இசை பாடல் என தொடர்ந்து இருவரும் பிஸியாக இருந்து வந்தனர்.

இப்படியான சமயத்தில் திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக கூறி தங்களது சமூக வலைதளத்தில் ஒருசேர பதிவை வெளியிட்டு எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார்கள்.

இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்து சில வருடங்களுக்கு முன்னர் பாடகி சைந்தவி ஜிவி பிரகாஷ் குறித்து மிகுந்த காதலோடு பேசிய துரோ பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரல் ஆகியுள்ளனர்.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, நான் ஜிவி இசையில் பல பாடல்களை தொடர்ச்சியாக பாடி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

எனக்கு வேண்டியதை கடவுள் கொடுப்பார்:

அது மட்டுமில்லாமல் மனைவிக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து வருகிறார் ஜி வி பிரகாஷ் இதனால் வளர்ந்து வரும் கலைஞர்கள் அடையாளம் இல்லாமல் போகிறார்கள் என பேசுகிறார்கள்.

ஆனால் அப்படி ஒரு பேச்சுக்கள் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் ஒன்றாக சேர்ந்து பாடுவதையும் இசையமைப்பதையும் நிறுத்திக் கொண்டோம்.

ஆனால் உண்மையில் அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மனைவி போன்று எல்லாம் என்னை ட்ரீட் பண்ணவே மாட்டார்.

அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருக்கு என்ன தேவையோ அதை மட்டும் என்னிடமிருந்து பாடல் மூலம் வாங்கிக் கொள்வார்.

அதுதான் ஜிவி சார்… எனக்கு என்ன வேண்டும் என்பதை கடவுள் பார்த்து கொடுப்பாரு என கூறியிருக்கிறார் சைந்தவி.

ஜிவி பிரகாஷ் மனைவி குறித்து பேசும்போது.. சைந்தவி ஒவ்வொரு திருமண நாளன்றும் ஏதேனும் கிப்ட் வாங்கி என்னை சர்ப்ரைஸ் கொடுப்பார்.

மகளுக்கு ஜிவி அத பண்ண மாட்டார்:

அது எனக்கு மிகவும் ஸ்பெஷல் என கூறி இருக்கிறார். அத்துடன் சைந்தவி பேசும்போது ஜிவி பிரகாஷ் மகளுக்கு தாலாட்டு எல்லாம் பாட மாட்டார்.

அவர் பாடல் ஆரம்பித்தாலே என்னுடைய மகள் எழுந்து உட்கார்ந்து அவர் பாடலுக்கு தாளம் போட ஆரம்பித்துவிடுவார்.

இப்படித்தான் அவர்களின் பாண்டிங் இருக்கிறது என மிகுந்த சந்தோஷமாக தனது மகள் குடும்பம் காதல் பற்றிய பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த அளவுக்கு மிகச்சிறந்த ஜோடியாகவும் காதலர்களாகவும் கணவன் மனைவியாகவும் வாழ்ந்து வந்த இவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை வந்துவிட்டிருக்கும்? ஏன் விவாகரத்து செய்தார்கள்?என்ன காரணமாக இருக்கும்? என ஆராயத் தொடங்கிய விட்டனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam