Connect with us

News

வார்த்தை.. – எச்சரிக்கை விடுத்த சமந்தா..! – ராஷ்மிகா கொடுத்த ரிப்ளை..! – வைரல் ட்வீட்..!

By TamizhakamApril 23, 2022 8:55 AM IST

நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.இந்நிலையில், திடீரென நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் «என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு» என்கிற ரீதியில் ஒரு ட்வீட்டை போட்டு வார்னிங் செய்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் நடிகை சமந்தாவை பற்றிய ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருவதால், இந்த ட்வீட் போட்டிருக்கிறாரா? அல்லது வேறு யாருக்காவது மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இதனை பதிவிட்டுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமந்தாவை பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெலுங்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அது முற்றிலும் வதந்தி, அது போன்ற ஒரு எண்ணம் தனக்கு இல்லை என நாக சைதன்யா அதிரடியாக கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் 28ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஸ்ரீசாந்த், பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகிறது. இந்நிலையில், கதீஜாவுக்கு ஆர்மி அதிகமாக கண்மணிக்கு ஆர்மி அதிகமா என சமூக வலைதளங்களில் போட்டியெல்லாம் வைத்து கதீஜாவுக்குத் தான் ஆர்மி எனக் கூறி ஒரு பக்கம் சண்டையை கிளப்பி உள்ளனர்.

அவர் பதிவு செய்த ட்வீட் என்னவென்றால்,  என்னுடைய அமைதி அறியாமையால் என்றோ.. என்னுடைய அமைதியை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றோ.. என்னுடைய இரக்கத்தை என்னுடைய பலவீனமென்றே அர்த்தம் கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த சக நடிகை ராஷ்மிகா வார்த்தை.. என்று முஷ்டியை காட்டி எமோஜி ஒன்றையும் ரிப்ளை செய்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top