1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்படுவது தான் சம்சாரம் அது மின்சாரம்.
இத்திரைப்படத்தை விசு இயக்கி நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகச்சிறந்த படமாக இன்று வரை பலரது பேவரைட் படமாகவும் இருக்கும்.
குடும்பத்தில் நடக்கும் மிகவும் எதார்த்தமான விஷயங்களை அப்படியே தத்துரூபமாக காட்சியளித்திருப்பார்கள்.
சம்சாரம் அது மின்சாரம்:
இப்படத்தில் ரகுவரன், லட்சுமி ,டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக மனோரமாவின் நடிப்பு மிகப்பெரிய அசத்தலாக இருந்ததாக அப்போதே ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளினார்கள்.
இப்படத்தில் காமெடி காட்சிகள் இல்லையென்ற காரணத்தால் மனோரமாவின் பாத்திரம் இணைக்கப்பட்டதாக விசு கூறியிருந்தார்.
ஒருவேளை அப்படி காமெடி காட்சி இல்லையென்றால் “கண்ணம்மா… கம்முன்னு கெட” என்ற வசனம் பலருக்கும் தெரியாமலே போயிருக்கும்.
அப்படத்தில் மனோரமாவின் அட்டகாசமான நடிப்பு பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
மேலும், படத்தில் நடிகை லட்சுமி நடிப்பு பிரமாதமாக இருந்ததாக அப்போது ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
கூட்டு குடும்பம் பிளவு படுவதையும் அவர்களை மீண்டும் இணைக்க முயற்சிப்பதும் மூத்த மருமகளை சுற்றி படம் வந்து செல்லும்.
விருதுகளை குவித்த திரைப்படம்:
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது கிட்டத்தட்ட. திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றி படமாக பெயர் எடுத்தது.
படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது, சிறந்த தமிழ் படத்திற்கான பிலிம் பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், லக்ஷ்மிக்கான சிறந்த நடிகை உட்பட பல விருதுகளை இந்த படம் குவித்து இருக்கிறது.
இதே திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகி அங்கும் சக்கை போடு போட்டது.
தெலுங்கில் சம்சாரம் ஓக சதுரங்கம், மலையாளத்தில் குடும்ப புராணம் என்று உள்ளிட்ட பெயர்களில் வெளியானது.
சரோஜினியை நியாபகம் இருக்கா?
இந்த படத்தில் சரோஜினி திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார். அந்த கேரக்டர் பலராலும் மறக்கவே முடியாது.
லக்ஷ்மிக்கு அடுத்தபடியாக சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினியின் கேரக்டர் பேசப்பட்டது.
குறிப்பாக இவர் தமிழில் பாண்டியன், சுரேஷ், ஆனந்த் பாபு, எஸ் வி சேகர் போன்ற சிறிய நடிகர்களுக்கு ஜோடியாகவே நடித்து வந்தார்.
தமிழை தவிர்த்து கன்னடத்திலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே 2007 2008க்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் அவர் காணாமல் போனார்.
திரையுலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வரும் இளவரசிக்கு 54 வயது ஆகிறது. கோபால் என்கிற வங்கி அதிகாரியை இளவரசி திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகளோடு அமைதியான குடும்ப வாழ்க்கை இருக்கிறது அதுமட்டுமில்லாமல் சென்னை ஈ சி ஆர்ல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.