சட்டுபுட்டுனு கல்யாணத்த பண்ணி கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பார்க்க வேண்டும் என்று தான் பலரும் பல்வேறு கனவுகளோடு தங்கள் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அறிவியல் தன்னை மிஞ்சி வளர்ந்து இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இன்றிருக்கும் தம்பதிகள் பலருக்கும் எளிதில் பிள்ளை பேரு என்பது கிடைப்பதில்லை. இதற்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கங்களும் மாறி விட்ட வாழ்க்கை முறைகள் என சொல்லலாம்.
அது என்ன வாடகை தாய்..
அந்த வகையில் குழந்தை இல்லாத தம்பதிகள் தற்போது குழந்தை பெறுவதற்காக மருத்துவமனைகளை நோக்கி செல்கிறார்கள். மேலும் பிள்ளை பெற முடியாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய கலாச்சாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இது போலத் தான் சமீபத்தில் நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.மேலும் தற்போது நாடு முழுதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம் கருப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகள் ஆகியோரின் அணுக்களை எடுத்து ஒன்றிணைத்து அந்த கருவை மட்டும் வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர வைப்பது தான் வாடகை தாய் முறை.
இந்த வாடகை தாய்முறையில் பல்வேறு ரகசியங்கள் ஒளிந்து இருக்கின்றன என்பதை மாற்று கருத்து இல்லை. மேலும் இது பற்றி இன்னும் பலருக்கு தெரியாமல் இருப்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
இந்த வாடகை தாய் முறையானது நிஜமாகவே குறிப்பிட்ட தம்பதிகளின் உயிரணுக்களின் மூலம் தான் குழந்தை உருவாகிறது அல்லது ஆணின் உயிரணுவை மட்டும் எடுத்து குறிப்பிட்ட வாடகை தாயின் அண்டத்துடன் சேர்த்து குழந்தை உருவாகிறது.
அத்தோடு இந்த விஷயங்கள் எல்லாம் குறிப்பிட்ட தம்பதிகள் மற்றும் மருத்துவமனை வாடகைத்தாய் ஆகியோருக்குள் இருக்கும் ரகசியம் இது பற்றி விவாதிக்கவும் ஆராய்ச்சி செய்யவோ முடியாது.
நயன்தாராவால் பிரபலமான வாடகை தாய் முறை..
இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு இது குறித்த பேச்சுக்கள் பொது மக்கள் மத்தியில் அதிகம் அளவில் பார்க்க முடிகிறது.
இதனை தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலம் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இது குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் பகிரப்பட்டன.
அதிலும் குறிப்பாக தங்களுக்கு குழந்தை வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இன்னொருவரின் கருப்பையை வாடகைக்கு எடுப்பது என்பது ஒரு விதமான சுரண்டல் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இந்த வாடகை தலைமுறை காரணமாக ஏழை எளிய பெண்கள் இதனை ஒரு தொழிலாக பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஸ்கூலுக்கு போற பெண்ணும் வாடகை தாயா..
எனவேதான் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் கூட குறிப்பிட்ட பகுதியில் வாழும் பெண்கள் இதனை முழுமையான தொழிலாக செய்து கொண்டிருக்கின்றனர். இப்படி செய்யக்கூடிய பெண்களுக்கு அதிக பட்சமாக மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
இந்த தொகை அவர்களுக்கு மிகப்பெரிய தொகையாக தெரிகிறது. இதனால் ஒரு குழுவாக சேர்ந்து இப்படியான தொழிலை முன்னெடுக்கிறார்கள்.
இது சரியான போக்கு கிடையாது. இது ஒரு மோசமான சமூகத்தை உருவாக்கக் கூடிய விஷயமாக நான் பார்க்கிறேன் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருவர் பேசியிருந்தார்.
மேலும் குஜராத்தில் ஒரு கிராமத்தில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வாடகைத்தாய் வேலையை செய்கிறார்கள். குறிப்பாக சில ஊர்களில் பள்ளிக்கு செல்லும் பெண்களை கூட வாடகை தாயாக மாற்றுகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் வருகிறது.
வெளி வந்த மிரண்டிடும் ரகசியம்..
இதனை தற்போது அடையாளம் கண்டு இவருக்கு கடுமையான சட்ட நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என தங்களுடைய ஆதங்கங்களை பதிவு செய்திருக்கின்றனர். இதனை கேட்டு கோபிநாத் இப்படியெல்லாம் நடக்கிறதா என மிரண்டு போனார்.