தூக்கில் பிணமாக பிரபல சீரியல் நடிகர்.. நள்ளிரவில் நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!

தெலுங்கு சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் நடிகைகளின் அடுத்தடுத்த மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இந்த மரணம் பெரும் டோலிவுட் சினிமாவையே உருக்குலைய செய்துள்ளது.

பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம்:

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்கள், பிரபலங்களின் அடுத்த அடுத்த மரணம் அங்கு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இது போதாத காலம் போல தெலுங்கு சினிமாவுக்கு என பத்திரிகைகள் செய்து வெளியிடும் அளவுக்கு தொடர் மரணங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு சீரியல் ஆன திரிநயனி என்ற சீரியலில் நடித்து வந்தவர் தான் பவித்ரா ஜெயராம்.

இவர் சில தினங்களுக்கு முன்னர் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அதே தெலுங்கு சீரியலில் அவருடன் ஹீரோவாக நடித்து வந்த சந்திரகாந்த் பவித்ரா இறந்த அன்று அவருடன் காரில் பயணித்தாராம்.

அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி அதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் மரணம்:

இந்த விபத்தில் சிறு காயங்களுடன் தப்பித்த சந்திரகாந்த் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்துள்ளார். இந்த மரணம் தெலுங்கு திரையுலகத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்து பிரபலமான ஜோடியின் இந்த அடுத்தடுத்த மரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் சமீப காலமாக ராதாம்மா பெல்லி மற்றும் கார்த்திகா தீபம் உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் தான் ஹைதராபாத் புறநகர் பகுதியான மணிக்கொண்டா அல்காப்பூர் அல்காபூர் காலனியில் உள்ள தனது வீட்டில் சந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சந்திரகாந்த் பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்ததில் இருந்தே அவரின் மரணத்தை தாங்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தகவல்கள் கூறுகிறது.

மனைவி பவித்ரா சாலை விபத்தில் உயிரிழந்தது. முதலே சந்திரகாந்த் தனது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமான பதிவுகளையும் கருத்துகளையும் வெளியிட்டு வந்தார்.

அத்துடன் பவித்ராவுடன் எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதன் மூலம் அவர் பவித்ராவின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறார் என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கொடுத்து வந்தனர்.

நடிகர் சந்துருக்காந்த் தற்கொலை:

ஆனாலும் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் சந்துருகாந்த் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சந்திரகாந்த் கடந்தை மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடினார்.

அப்போது தனது பிறந்தநாளின் போது பவித்ரா ஜெயராம் எடிட் செய்த பழைய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு அப்பா எனக்காக இரண்டு நாட்கள் காத்திருங்கள் என பதிவிட்டு இருக்கிறார்.

இதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கவனிக்காமல் விட்டு விட்டனர். ஆனால், அது அவர் திட்டமிட்டு தான் முன்கூட்டியே இது போன்று பதிவிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சந்திரகாந்த் ஏற்கனவே ஷில்பா என்ற பெண்ணை கடந்த 2015 திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் இரண்டு குழந்தைகளை பெற்றார்.

ரகசிய திருமணம்:

இந்த சூழலில் தான் அவரைப் பிரிந்து விட்டு கடந்த ஆறு வருடங்களாக பவித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் கூறுகிறார்கள்.

அதே நேரம் மற்றொரு தரப்பினர் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறுகிறார்கள்.

இப்படியான நேரத்தில் சந்துருகாந்தின் இந்த திடீர் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்ன என்பது பற்றி துரிதமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam