சீரியல் போலவே நிஜவாழ்கையிலும் சீரழிந்த 5 நிஜ சீரியல் ஜோடிகள்..! அட கொடுமைய..!

பொதுவாக தமிழ் சீரியல்கள் என்றால் அதில் நல்ல வகையான கதைப்போக்கு என்பதே இருக்காது. தொடர்ந்து குடும்பத்தில் ஏதாவது மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பாவதாகதான் சீரியலின் கதைகளே இருக்கும்.

அதிலும் ஹைலைட்டாக இப்பொழுது இருக்கும் வில்லி கதாபாத்திரங்கள் எல்லாம் விஷம் வைப்பது, காரை கொண்டு விபத்து ஏற்படுத்துவது என்று இருக்கும் அனைத்து வில்லத்தனங்களையும் செய்வதாக இருக்கின்றனர். சீரியலில் தான் இப்படி இருக்கிறது என்றால் சில நடிகைகளுக்கு நிஜ வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது.அப்படியாக மோசமான நிஜ வாழ்க்கையை கொண்ட சில சீரியல் நடிகைகளை இப்பொழுது பார்க்கலாம்.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா ஜோடிகள்:

சீரியல் நடிகர்களாக இருந்த இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆகிய வெகு சில காலங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் இவர்களை குறித்து அதிகமான சர்ச்சை அப்பொழுது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. நடிகை சம்யுக்தா தொடர்ந்து பாலியல் ரீதியாக தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக பேசியிருந்தது அப்பொழுது அதிக சர்ச்சையாகி வந்தது.

அடுத்ததாக ரக்ஷிதா மற்றும் தினேஷ், இவர்கள் இருவருமே விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். மிகவும் ஆசைப்பட்டு காதலித்துதான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் கடைசியில் அவர்களது வாழ்க்கை பிரிவில் தான் முடிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ரச்சிதாவுடன் சேர்வதற்கு ஆசை இருப்பதாக தினேஷ் கூறியும் ரச்சிதா அதற்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. அடுத்ததாக நடிகை திவ்யா மற்றும் அவரது கணவரான ஆர்னவ் திவ்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பொழுது ஆர்னவ் தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக பேச்சுக்கள் இருக்கின்றன.

அர்னவ் திவ்யா:

அதனை தொடர்ந்து தற்சமயம் குழந்தை பிறந்த பிறகும் கூட ஆர்னவ் கொடுக்கும் தொல்லைகள் என்பது தீரவில்லை என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. அடுத்த ஜோடிகள் என்றால் தாடி பாலாஜி மற்றும் நித்தியா இவர்கள் இருவரும்தான்.

திருமணம் ஆகி பல வருடங்கள் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மற்ற ஜோடிகளோடு ஒப்பிடும் பொழுது இவர்கள் நிறைய வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர் என்று கூறவேண்டும். ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டனர்.

இருந்தும் இந்த பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. அடுத்த ஜோடி என்றால் ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர் ஜோடிகளை கூறலாம். ஈஸ்வர் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாக அப்பொழுது பெரும் சர்ச்சை இருந்தது. ஆனால் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இருந்தாலும் ஈஸ்வரை அவரது மனைவி ஜெயஸ்ரீ விவாகரத்து செய்துவிட்டார் தற்சமயம் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களெல்லாம் நிஜ வாழ்க்கையில் கூட சுமுகமான உறவு கிடைக்காத தமிழ் சீரியல் நடிகைகள் நடிகை நடிகர்களாக இருக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …