சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகளுக்கு வெள்ளித்திரை நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் என்று கூறலாம். சீரியலில் நடித்தாலும் கூட சமூக வலைதளங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார்கள் நடிகைகள்.
எனவே அவர்களுக்கும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலம் கிடைக்கிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில், செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை ஷபானா ஷாஜகான்.
மும்பையைச் சேர்ந்த இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் நடித்திருந்தார் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய தோழிகளுடனும் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை இணைய பக்கங்களில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷபானா ஷாஜகான் கூறியிருந்த சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.
அவர் கூறியதாவது நான் ஒரு இஸ்லாமிய பெண், சீரியலில் பொட்டு வைத்துக் கொண்டு நடித்த ஒரே காரணத்திற்காக என்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டு காலம் என்னிடம் பேசாமல் இருந்தனர்.
மட்டுமில்லாமல் தன்னுடைய இளமை கால முதலே ஒரு ஹிந்து பையனை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே… ஹிந்து பையனை திருமணம் செய்யக்கூடாது.. என்று மாத்திரை போடுவது போல சொல்லி சொல்லி வளர்த்தனர்.
இது வாடிக்கையாக எனக்கு நடந்து கொண்டிருந்தது. அடிக்கடி இதனை சொல்லிக் கொண்டே இருந்ததால், திருமணம் செய்தால் ஒரு ஹிந்து பையனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன் என கூறி இருக்கிறார் நடிகை ஷபானா ஷாஜகான்.
ஒரு நடிகை சீரியலில் பொட்டு வைத்துக் கொண்டு நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய சொந்த குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். இதெல்லாம் தீண்டாமை கணக்கில் வராதா..? ஒட்டுமொத்த நாடே தீண்டாமைக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் பொழுது.. இப்படி தன்னுடைய குடும்பத்தினரால் ஒதுக்க வைக்கப்பட்டிருக்கும் ஷாபனா போல இன்னும் எத்தனை பெண்கள் துன்பப்படுகிறார்களோ..? என்று இணைய பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து கொள்கிறார்கள் ரசிகர்கள்.
அதற்கேற்றார் போல நடிகர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஷாபனா ஷாஜகான் என்பது குறிப்பிடத்தக்கது.