Connect with us

News

கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!

By TamizhakamJuly 23, 2024 8:05 PM IST

தமிழ் திரைத்துறையில் அதிக பிரபலமாக இருந்துமே கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காத நடிகையாக நடிகை சாக்ஷி அகர்வால் இருந்து வருகிறார்.  பொதுவாக சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆசை கொண்டுதான் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு நடிப்பதற்கு வருகின்றனர்.

ஆனால் சாக்‌ஷி அகர்வாலை பொருத்தவரை அவருக்கு சிறுவயது முதலே எல்லாம் சினிமாவின் மீது ஆசை கிடையாது. உண்மையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஐடி வேலையில் சேர வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

ஐ.டி வேலை:

அந்த வகையில் பிரபல ஐடி நிறுவனங்களில் அவருக்கு வேலை கிடைத்தது அங்கு நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தார். இந்த நிலையில் மாடலிங் துறையில் அவருக்கு கொஞ்சம் பழக்கவழக்கம் இருந்தது. அப்பொழுது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ஆள் இல்லை என்பதால் சாக்‌ஷி அகர்வாலை அதற்கு அழைத்தனர்.

அங்கு சென்று நடித்த பொழுது நடிப்பின் மீது சாக்‌ஷி அகர்வாலுக்கு ஆர்வம் வந்தது. ஏனெனில் அந்த விளம்பரத்தை பார்த்த பலரும் அது குறித்து சாக்‌ஷி அகர்வாலை புகழ்ந்தனர். எனவே அந்த புகழின் மீது ஆசை கொண்ட சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார்.

இப்படியாக ராஜா ராணி திரைப்படத்தில் வாய்ப்பை பெற்ற சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடிக்க தொடங்கினார். காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக இவர் நடித்திருப்பார்.

தொடர்ந்து வாய்ப்புகள்:

அதேபோல நிறைய திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாக சாக்‌ஷி அகர்வால் நடித்திருக்கிறார். ஆனால் கதாநாயகியாக மட்டும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது முக்கியமாக பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்கவே அதிக கவர்ச்சியுடன் வலம் வந்தார் சாக்‌ஷி அகர்வால். இது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

மேலும் அப்பொழுது பிக் பாஸில் கலந்து கொண்டிருந்த நடிகர் கவினுடன் இவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்களும் இருந்து வந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான பஹிரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய சாக்‌ஷி அகர்வால் கூறும் பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு நான் வெளியே வந்த பொழுது எனக்கு திருமணம் ஆகிவிட்டது அதற்கு என்று ஒரு வதந்தி வந்தது. பிறகு நான் விவாகரத்து செய்துவிட்டு நியூசிலாந்தில் வசிக்கிறேன் என்றெல்லாம் கிசுகிசு வந்தது. மேலும் இதுதான் எனது திருமண போட்டோ என்று ஒரு திருமண போட்டோவையும் வெளியிட்டனர். இப்படி தினந்தினம் என்னை பற்றி ஏதாவது கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது என்று வேதனையாக கூறி இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top