Connect with us

News

«அம்மாடியோவ்..! – பேராண்மை படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..?..» – ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!

By TamizhakamSeptember 28, 2022 1:20 PM IST

சென்னையில் பிறந்த நடிகை சரண்யா மாடல் அழகி மற்றும் நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.

இந்த திரைப்படத்தில் நடிகை சந்தியா ஹீரோயினாக நடிக்க நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய சரண்யா நாக் இந்த படத்தில் நான்தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது ஆனால் என்னை ஏமாற்றி ஹீரோயினுக்கு தோழியாக நடிக்க வைத்துவிட்டார்கள். சரி என்ன நடித்து கொடுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

காதல் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகாகவே ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பேராண்மை.

இந்த திரைப்படத்தில் அஜிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல அறிமுகத்தையும் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு 2012ஆம் ஆண்டு மழைக்காலம் திரைப்படத்தில் நடித்தார், அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் நடித்த இவர் உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பேராண்மை படத்தில் நடித்த சரண்யாவா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top