Connect with us

News

பீர்க்கங்காய் வளர்ச்சியா..?, பொம்பள புள்ள வளர்ச்சியா..? – வைரலாகும் புன்னகையரசி சினேகாவின் மகள்..!

By TamizhakamSeptember 27, 2022 8:58 AM IST

 பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் தனது அழகிய பல்வரிசை ரசிகர்களை ஈர்த்த கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகாவை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. ஆரம்ப கால படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று ரேவதி போல நடித்திருந்தது இவருக்கு ஒரு கூடுதல் சிறப்பாக இருந்தது.

 இதனைத் தொடர்ந்து சினேகா பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரை சிரிப்பழகி என்று தமிழ் திரையுலகமே அழைத்தது. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது எந்த விதமான சிக்கல்களும் பிரச்சனைகளும் இல்லாமல் இவர்கள் வாழ்க்கை சுமூகமாக நடந்து கொண்டு வருகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

 தற்போது திரைத்துறையில் நடிக்காத சினேகா சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று வருகிறார். மேலும் தன் கணவரோடு இணைந்து சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் எப்போதும் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சினேகா அவ்வப்போது தனது மகன், மகள் கணவரோடு இணைந்து இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் பார்வைக்கு விடுவார். ரசிகர்களும் அதை பார்த்து விட்டு கமெண்ட் களையும் லைக்குகளையும் பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றுதான்.

 இந்த சூழ்நிலையில் தற்போது தனது இரண்டாவது பெண் குழந்தையை போட்டோ எடுத்து குடும்பத்தோடு இருக்கும் அந்த போட்டோவை இவர் தனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இப்போது தான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்குள் இவ்வளவு தூரம் அந்த குழந்தை வளர்ந்து விட்டதா என்று ஆச்சரியமாக  கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

 அவர்கள் அனைவருமே நீல நிற உடையில்  இந்த போட்டோக்களில் காட்சியளிக்கிறார்கள். மேலும் தனது பெண் தனியாக நின்று இருப்பதை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. இதைத்தான் கிராமத்தில் பீர்க்கங்காய் வளர்ச்சியா அல்லது பெண் குழந்தை வளர்ச்சியா என்று கேட்பார்கள். அந்த வாக்கு இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உண்மை ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top