Connect with us

News

உதட்டை பதம் பார்க்க முயன்ற முன்னணி நடிகர்..! – சினேகா கொடுத்த அதிரடி பதில்..!

By TamizhakamNovember 26, 2023 5:41 AM IST

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய அளவிற்கு இன்றும் எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் புன்னகை இளவரசி சினேகா பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரையுலகில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் நடித்த படங்களில் குறிப்பாக ஆனந்தம், ஜனா, வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் இருந்தது என சொல்லலாம்.

சினேகா நடிக்கும் படங்கள் முழுவதும் குடும்பபாங்கான சித்திரங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சியை அதிக அளவு வெளிப்படுத்தாமல் குடும்பப் பாங்கான பெண்ணாகவே பல படங்களில் நடித்திருப்பார். அந்த வகையில் இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.

அந்த கட்டுப்பாட்டுக்கு ஓகே என்றால் மட்டும் தான் இந்த படத்தில் நடிப்பேன் என்பதை ஆணித்தனமாக கூறி இருக்கக்கூடிய விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை சரண் இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படமானது 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை என்று கூறக்கூடிய அளவு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படம் அமைந்தது. மேலும் இந்த படத்திற்கு கமலோடு இணைந்து நடிக்க முதன்முறையாக சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்ட போது சில கண்டிஷங்களை சினேகா போட்டிருக்கிறார்.

அதில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரக்கூடிய காட்சி இருக்கவே கூடாது என்ற நிபந்தனையை விதித்தார். இதற்குக் காரணம் கமல் படம் என்றாலே உதட்டோடு உதடு பதித்து முத்தம் தருவது போல் காட்சிகள் கட்டாயம் ஒன்று இரண்டு வைக்கப்படும் என்பதால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் அப்படி ஒரு காட்சியை வைத்து விட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே ஆலோசனை செய்து இந்த கண்டிஷனை போட்டு இருக்கிறார்.

இந்த கண்டிஷனுக்கும் நடிகர் கமலஹாசன் ஓகே சொன்னதை அடுத்து அவரோடு சினேகா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top