Connect with us

News

“நான் இதற்கு தான் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறேன்..” – போட்டு உடைத்த நடிகை ஸ்ரீ ரஞ்சினி..! – வியப்பில் ரசிகர்கள்..!

Published on : March 20, 2023 7:49 AM Modified on : March 20, 2023 7:49 AM

பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீ ரஞ்சினி தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீ ரஞ்சனி.

அதன் பிறகு, செல்லமே, அன்னியன், திமிரு, சரவணா, போக்கிரி, மொழி, வெள்ளித்திரை, சர்வம், மாப்பிள்ளை, வத்திக்குச்சி, நண்பேண்டா, வாலு, ரெக்க, ஆடை, நாடோடிகள் 2, அண்ணாத்த, சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அம்மா மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் சீரியல் நடிகையாகவும் அறியப்படும் இவர், சமீபத்திய ஒரு பேட்டியில் பேசும் பொழுது கூறியுள்ள சில விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அவர் கூறியதாவது, நான் சமூக வலைதளங்களில் அதிகம் பயணிப்பது கிடையாது. அதிகமாக இன்டர்நெட்டை பயன்படுத்துவது கிடையாது. என்னுடைய கைப்பேசியில் இன்டர்நெட்டை பயன்படுத்துவேன் என்றாலே யூட்யூபில் பாடல்களை கேட்பதற்காக மட்டும்தான் என்று சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அடுத்து இவர் வெளியிட்ட இன்னொரு தகவல் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று கூற வேண்டும். காரணம் இவர் உண்மையில் ஒரு நடிகை கிடையாது என்பது தான்.

சினிமாவில் நடிக்க வரும் முன்பு விளையாட்டு வீராங்கனையாக, தடகள வீராங்கனையாக இருந்திருக்கிறார் நடிகை ஸ்ரீரஞ்சனி. ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், தேசிய ஜூனியர் சாம்பியன் 100 மீட்டர் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். மேலும் ஹாக்கி விளையாட்டிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

வெற்றிகரமான தடகள வீராங்கனையாக பயணித்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமாவில் நடிப்பதில் ஆரம்பத்தில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லையாம். ஆனால், பள்ளி காலங்களில் இவர் நடித்த நாடகங்கள் மற்றும் குறும்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தது இவருடைய சினிமா வாழ்க்கைக்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கின்றது.

இதனால் ஸ்ரீ ரஞ்சனியின் அம்மாவும் இவர் சினிமாவில் நடிப்பதற்கு ஊக்கமளித்திருக்கிறார். ஆனால், மனதளவில் தயாராகமலே இருந்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. தொலைக்காட்சிகளில் விளம்பர படங்கள் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியலில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே ஒரு விதமான தயக்கத்துடன் நடித்திருக்கிறார்.

ஆனால், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் பயணிக்க தொடங்கியதால் என்னுடன் பயணித்த சக தடகள வீராங்கனைகள் என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களுடைய வாழ்க்கை பாதையை மாற்றிவிடும்.

அந்த அளவுக்குத் தான் விளையாட்டு வீராங்கனையாக இருந்த நான் இப்பொழுது சினிமா நடிகையாக மாறி இருக்கிறேன். ஒரு விளையாட்டு வீராங்கனையாக பல அழகிய நினைவுகள் இருக்கின்றன.

அவை எனக்கு எப்போதும் என்னை இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றன என்பதை பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒருவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கும் யாருமே அவர்களுடைய வாழ்க்கையில் நிலையாக ஒரே விஷயத்தில் இருப்பது கடினமான விஷயம் என்று பேசி இருக்கிறார்.

மேலும் எனக்கு கிடைத்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருமே என்னை நல்ல முறையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நான் மிகவும் பாக்கியம் செய்து போல உணர்கிறேன் என்றும் பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

More in News

To Top