சிருஷ்டி டாங்கே,(Srushti Dange) தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அழகான நடிகை. சிரித்தால், கன்னத்தில் குழிவிழுவது, இவரது ஸ்பெஷல் பியூட்டி. மும்பை வரவாக, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்.
வழக்கம்போல, தமிழ் சினிமாவில் மிக அழகான நடிகைகளை, நடிப்பதற்கு பயன்படுத்தாமல் சில இயக்குநர்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவது உண்டு. துவக்க காலத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைக்கிறதுக என்பதற்காக அழகான சில நடிகைகள், கவர்ச்சி காட்டி நடித்து பின்னாளில் அவர்கள் கவர்ச்சி நாயகிகளாகவே, தமிழ் சினிமாவில் காலம் கழித்த நிலையும் நடந்திருக்கிறது.
Srushti Dangeதமிழ் சினிமாவில் இந்த பார்மூலா என்பது, நீண்டகாலமாக இருந்து வருகிறது. கரகாட்டக்காரன் படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில், அம்மன் பாட்டுக்கு தீ மிதித்து ஆடுவது போல, காட்சி இடம்பெற, அடுத்த சில ஆண்டுகளில் வந்த பல படங்களில், படத்தின் இறுதியில் இந்த தீ மிதி காட்சியும் பக்தி பாடலும் இடம்பெற்றது.
சினிமா படத்தின் காட்சி சென்டிமென்ட் மட்டுமின்றி, நடிகைகளுக்கும் இந்த கவர்ச்சி முத்திரை சென்டிமென்ட் விழுந்துவிட்டால், அதில் இருந்து தப்பிப்பது கடினம். நடிகை சிருஷ்டி டாங்கே போன்ற பல நடிகைகள், அப்படித்தான் கவர்ச்சி நாயகிகளாக மாறிப் போகின்றனர்.
சிருஷ்டி டாங்கே, யுத்தம் செய், ஏப்ரல் பூல் ஆகிய படங்களில் துணை கதா பாத்திரங்களை ஏற்று நடித்தவர். இந்த நடிப்பு ரசிகர்களிடம் அவரை பெருமளவில் கொண்டு சேர்க்கவில்லை. தொடர்ந்து, 2014ம் ஆண்டில், ‘ மேகா’ என்ற படத்தில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். பளிங்கு போன்ற இவரது மொழு மொழு என இருந்த இவரது மேனி அழகை பார்த்து, ரசிகர்கள் அசந்து போயினர். இந்த படமும் வெற்றி பெற்றது.
Srushti Dangeதொடர்ந்து டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி, தர்மதுரை, ராஜாவுக்கு செக், பொட்டு, அச்சமின்றி, சரவணன் இருக்க பயமேன், காலக்கூத்து, சக்ரா, முப்பரிமாணம்ஜித்தன் 2, சத்ரு, வில் அம்பு, கட்டில், நவரச திலகம், காதலாகி ஒரு நொடியில், புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறிப்போனார்.
இதில், சில படங்களில் சில காட்சிகளில் வந்து செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார், அல்லது, ஹீரோவின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இவரை மட்டுமே மையப்படுத்திய கதைகளாக அவை இருக்கவில்லை. நாயகிக்கான ஒரு பாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
Srushti Dangeஇந்த காலகட்டத்திலும் திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளுக்கு, அவர்களது கேரக்டர்களை மையப்படுத்திய கதைகள் படமாக்கப்படுகிறது. அந்த படங்களும் ஹிட் ஆகி வருகின்றன.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த வகையில், அதிகளவில் பேசப்பட்டவர், மக்களால் கவனிக்கப்பட்டவர், தியேட்டரில் தோன்றிய காட்சியில் அதிக கைதட்டல் பெற்றவர் விக்ரமோ, கார்த்தியோ அல்ல, திரிஷாவுக்கு தான் அதை காண முடிந்தது. திரிஷாவின் குந்தவை கேரக்டர்தான் அதிகமாக பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது, ‘உயிர் உங்களுடையது தேவி’ என்ற படத்தில் இடம்பெற்ற வசனம் கூட, திரிஷாவுக்கு உரியதாக மாறிவிட்டது.
Srushti Dangeஆனால், சிருஷ்டி டாங்கே போன்ற நடிகைகள் கவர்ச்சி நாயகிகளாக மாறி, அதற்கேற்ப கேரக்டர்களில் திணிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. அதனால், பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கும் சிருஷ்டி டாங்கே போன்ற நடிகைகள், தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், மஞ்சள் நிற டிரஸ்சில், மந்தகாச புன்னகையில் சிருஷ்டி டாங்கே வின் இந்த புகைப்படங்கள் இப்போது, வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.