Connect with us

News

காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

By TamizhakamMarch 30, 2024 8:46 PM IST

தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகர்கள் ரசிகர்கள் மனதில் ஒரு ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். குறிப்பாக ஹீரோயிசம் செய்து ரசிகர்களிடம் புகழ் பெறும் ரசிகர்களுக்கு மத்தியில் வில்லனாக நடித்தும் அதிக ஈர்ப்பை பெறும் நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.

அப்படித்தான் எம்ஜிஆருக்கு நம்பியாரும், ரஜினிக்கு ரகுவரனும் இருந்தனர். கமலுக்கு ஒரு நாசர் எப்போதும் வில்லனாக இருந்திருக்கிறார்.

டேனியல் பாலாஜி

அப்படி தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியின் சொந்த தம்பிதான் இவர். அதாவது முரளியின் தந்தைக்கு இரு மனைவிகள். முதல் மனைவியின் மகன் முரளி. 2வது மனைவியின் மகன்தான் டேனியல் பாலாஜி.

நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி நாடகத்தில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், அடையாளத்துக்காக சொல்லப்பட்ட டேனியல் பாலாஜி, அதுவே அவரது நிரந்தர பெயராகி விட்டது.

காக்க காக்க படத்தில்…

நடிகர் சூரியாவுடன் காக்க காக்க படத்தில், அவருடன் இருக்கும் 3 போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக நடித்திருந்தார் டேனியல் பாலாஜி. இந்த படத்தில் ஜோதிகாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜீவன்தான் வில்லனாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படம் சூரியா, ஜோதிகா, டேனியல் பாலாஜி, ஜீவன் என அனைவருக்குமே அவர்களது சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு மீண்டும் வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜி மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

கொடூர வில்லனாக

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், அவருக்கே சவால் விடும் ஒரு கொடூர வில்லனாக தன்னை வெளிப்படுத்தி, டேனியல் பாலாஜி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதே போல் பொல்லாதவன் படத்திலும் அவரது வில்லன் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இதையும் படியுங்கள்: ஓவியாவா இது..? உடல் மெலிந்து விகாரமாக மாறிட்டாரே.. வைரலாகும் புகைப்படங்கள்..!

கடவுள் பக்தி நிறைந்தவராக…

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு படங்களில், கன்னட மொழி படங்களில் நிறைய நடித்திருக்கிறார். சொந்தமாக கோவில் கட்டி இருக்கிறார். சினிமாவில் வில்லனாக நடித்த இவர், மிகச்சிறந்த ஆன்மிகவாதியாக கடவுள் பக்தி நிறைந்தவராக இருந்திருக்கிறார்.

இவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக, நடிகர் சூரியா தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, டேனியல் பாலாஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்னை வருத்திக்கொண்டு உழைத்தவர்

அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனையை, வலியை தருகிறது. காக்க காக்க படத்தில் அவருடன் நடித்த போது ஏற்பட்ட நிகழ்வுகள் எல்லாம் என் நினைவுக்கு வருகிறது. ஒரு காட்சி சிறப்பாக வர வேண்டும் என்றால், தன்னை வருத்திக்கொண்டு உழைக்கும் கடின உழைப்பாளி அவர் என்று சூரியா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காக்க காக்க படத்தில் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக வருவதற்காக டேனியல் பாலாஜி மிக கடுமையாக உழைத்தவர் என வேதனையுடன் பகிர்ந்திருக்கிறார் நடிகர் சூரியா.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top