டிவியில் சீரியல் நடிகையாக நடக்கும் ஸ்யமந்தா கிரணுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது அவர் இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் நிலா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பாப்புலரான நடிகையாக மாறி இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.43 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அந்த பதிவில் அவர் அண்மையில் திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். அங்கு அதிகாலையிலேயே செக்கின் வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார் இதனால் அந்த ஹோட்டலில் இவர் தங்கி இருந்த போது அது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
தேவைப்பட்டால் அதற்கு எக்ஸ்ட்ரா பணம் செலுத்துவது தொடர்பாக ஹோட்டல் மேனேஜருக்கும் நடிகைக்கும் விவாதம் ஏற்பட்டு அது பெரிய சண்டையாக மாறியது.
இதனை அடுத்து அதிகாலை 5.30 மணி அளவில் அந்த ஹோட்டலை விட்டு செக்கின் செய்திருக்கிறார். மேலும் காலி செய்வதற்கு முன்பே எப்போது காலி செய்வீர்கள் என தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு படாத பாடு படுத்தி விட்டார்களாம்.
இந்த சூழ்நிலையில் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோட்டல் மேனேஜரே ரூமுக்கு வந்து ரூம் கதவைத் தட்டி உங்கள் நேரம் முடிந்து விட்டது செக் அவுட் செய்யுங்கள் என்று கூறியதை தற்போது வீடியோவாக இன்ஸ்டால் பதிவு செய்திருக்கிறார்.
இதனை அடுத்து இவரது கோபத்தில் நியாயம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதோடு இதுபோல எதற்கு அவசரம் படுத்த வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.