இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பெண்களை பாதிக்கக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட ஒரு வித நோய் தான் எண்டோமெட்ரியோசிஸ். கடுமையான வலி வேதனைக்கு உட்படுத்தக்கூடிய இந்த நோயானது பெண்களை தாக்கும் போது அவர்களின் கர்ப்பப்பையின் உள்ளே மற்றும் வெளியே திசுவாக வளரக்கூடிய தன்மை உடையது.
பெரும்பாலும் இது கருப்பை மற்றும் பிலோபியன் டியூப் இருக்கின்ற பகுதிகளில் நிகழ்கிறது. மேலும் எண்டோமெட்ரியோசிஸ் தசை வளர்ச்சியின் காரணமாக பெண்களுக்கு கடுமையான வலி ஏற்படும். இந்த வலியை சமாளிப்பது பெரும் சவாலாக அவர்களுக்கு அமையும்.
எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள்
1.ஒழுங்கற்ற மாதவிடாய்
2.அதிகளவு சோர்வு 3.கருத்தரிப்பதில் பிரச்சனைகள்
4.கருத்தரிக்காமல் இருப்பது
5.இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள்
6.அதிகளவு மாதவிடாயின் போது ரத்தப்போக்கு
பெண்களுக்கு ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸ் என்ற இந்த நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது என்பது சவாலான விஷயமாக தற்போது உருவெடுத்துள்ளது.
இந்த நோயால் தாக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களை கண்டறியாத சூழ்நிலையில் அவர்களின் வலிக்கு உரிய சிகிச்சையை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இது மேலும் அவர்களின் அசௌவுரியத்தை அதிகப்படுத்துகிறது. எனவே அவர்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை தருவது அவசியமானதாகும். மேலும் கடுமையான வலியை ஏற்படுத்தும் இந்த நோயின் தாக்கமானது எவ்வாறு இருக்கிறது என்பதை ஆழமாகவும், விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கீழ்காணும் முறைகளில் எண்டோமெட்ரியோசிஸ் அதித வலியை ஏற்படுத்தும் அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்ஃப்ளமேஷன்
எண்டோமெட்ரியோசிஸ் வீக்கத்தை ஏற்படுத்தி நரம்புகளை எரிச்சலடையச் செய்து வலியை ஏற்படுத்தும். மேலும் வீக்கத்தினால் ஸ்கார் திசு உருவாக்கி வலி அதிகமாகும்.
ஹார்மோன்கள்
ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை சார்ந்த நிலை தான் எண்டோமெட்ரியோசிஸ் என கூறலாம். இது கருப்பைக்கு வெளியே உள்ள எண்டோமெட்ரியல் திசுக்களின் வளர்ச்சியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி வலிக்கு வழிவகுக்கும்.
நரம்பு முனைகள்
இந்த எண்டோமெட்ரியோசிஸ் இடுப்புப் பகுதியில் உள்ள நரம்பு முனைகளை எரிச்சலடையச் செய்து, வலியை ஏற்படுத்தும்.
எண்டோமெட்ரியோசிஸுடன் நோயோடு தொடர்புடைய வலியின் வகைகள்
மாதவிடாய் வலி
இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்கள் கடுமையான மாதவிடாய் வலியை சந்திப்பார்கள். இதனால் அவர்களது அன்றாட வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது.
நாள்பட்ட இடுப்பு வலி
ஆறு மாதங்களுக்கு மேல் இந்த நோயின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான இடுப்பு வலி ஏற்படும்.
உடலுறவில் ஈடுபடும் போது வலி
எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் பெண்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்படும். இது பாலியல் செயல்பாடு சங்கடமானதாக அல்லது ஆர்வத்தை குறைக்கும் வகையில் இருக்கும்.
குடல் இயங்கும் போது வலி
எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்கள் குடல் அசைவுகளின் போது வலியை அனுபவிக்கலாம். குறிப்பாக அவர்களின் மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் பாதிப்படைவார்கள்.
சிறுநீர் கழிப்பதில் வலி
எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் போது மாதவிடாய் காலங்களில் சிறுநீரை கழிக்கும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும்.
Loading ...
- See Poll Result