பிரபலங்கள் என்றாலே செய்தியாளர்கள் கூடுவது வாடிக்கைதான் அவர்களின் எதிர்காலமே இவர்களிடம் இருக்கிறது என்று கூறலாம். தவறான முறையை கையாண்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் வளர்ந்து வரும் நடிகை டாப்சி செய்தியாளர்களிடம் கோபப்பட்டு மிகவும் கடுமையான முறையில் பேசியிருக்கிறார்.
இதற்கு காரணம் அவர்களின் டோபரா படத்தை நெகட்டிவ்வாக அதிகம் விமர்சனம் செய்து வருவதால் முதலில் படத்தை நன்கு பார்த்து விட்டு அதன் பிறகு நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் என்று காண்டாக கூறியிருக்கிறார்.
தற்போது டாப்ஸியின் இந்த பேட்டி வீடியோவை நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கடுமையாக வறுத்து எடுத்து இருக்கிறார்கள்.
அடிக்கடி தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர் டாப்ஸி. இவர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின். இவரிடம் வைச்சு கட்டுதல் என்பது கிடையவே கிடையாது. அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலடியை மிக கேஷுவலாக தந்துவிடுவார்.
அப்படித்தான் ஒரு முறை கோவா படவிழாவில் இவர் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது ஹிந்தியில் பேசுங்கள் என்று ஒருவர் கூறினார். அதற்கு தடாலடியாக இந்தியில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் என்று வாயடைக்க… சரி நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூற நான் என்ன ஆங்கிலத்தில் பேச பாலிவுட் நடிகையா? என்று மீண்டும் எதிர் விவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் தமிழில் தான் நான் அறிமுகமாகி இருக்கிறேன் அதனால் தமிழில் உங்களிடம் பேச வா. என்று கேள்வியை கேட்டு அனைவரின் வாயையும் அடைத்து விட்டார்.
இப்படிப்பட்ட இவரிடம்தான் இவர் நடித்த டோபரா திரைப்படத்தைப் பற்றிய கருத்து தெரிவித்தபோது விமர்சனங்களையே எதிர்மறையான கருத்துக்களை பெற்று வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்க கோபத்தில் அவரை ஒரு பதம் பார்த்து விட்டார்.
செய்தியாளர்கள் நடிகை டாப்சி இடம் கேள்வியை கேட்க வேண்டுமென்றால் முன் ஜாக்கிரதையாக ஹோம் ஒர்க் செய்து கொண்டு வந்து விடுங்கள் இல்லையென்றால் முகத்தில் அறைந்தது போல் தான் பதில் இருக்கும் என்பது இதன் மூலம் விளங்குகிறது.
Loading ...
- See Poll Result