Connect with us

News

கோடீஸ்வர பெண்களாக பார்த்து வளைத்து போட்ட 6 முன்னணி நடிகர்கள்..!

Published on : July 19, 2024 8:34 PM Modified on : September 29, 2024 8:34 PM

சினிமாவிற்கு வரும் நடிகைகள் பெரும்பாலும் அதிக சொத்துக்களை கொண்ட பிரபலங்களையோ அல்லது தொழிலதிபர்களையோ திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெகு காலங்களாகவே நடிகைகள் பெரும்பாலும் பிரபலங்களைதான் திருமணம் செய்து கொண்டனர்.

முன்பெல்லாம் கூட இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் கிரிக்கெட் வீரர்களையோ அல்லது தொழிலதிபர்களையோதான் கல்யாணம் செய்கின்றனர். இந்த நிலையில் கோடீஸ்வர பெண்களாக பார்த்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

ஆர்யா- சாயிஷா:

அப்படியான நடிகர்களைதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக இருப்பவர் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா சாயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சாயிஷாவும் ஆர்யாவும் சேர்ந்து கஜினிகாந்த் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் உண்டானது.

சாயிஷாவின் தாத்தாவான திலீப் குமார் பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் ஆவார். அதனால் அதிக சொத்துக்கள் கொண்ட ஒரு நடிகையாக சாயிஷா இருந்து வந்தார். இதனால்தான் இவர்கள் இருவருக்கும் இடையே உடனே திருமணம் நடந்தது.

விக்ரம் பிரபு-லட்சுமி

நடிகர் சிவாஜியின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு லட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். இந்த பெண்ணின் தந்தை தமிழ்நாட்டில் கல்லூரி வைத்து நடத்தும் மிகப்பெரிய பணக்காரர் என்று கூறப்படுகிறது.

இதனாலேயே பிரபு தனது மகனுக்கும் இவரது மகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அடுத்து வரிசையில் இருப்பவர் நடிகர் அருண் விஜய். விஜயகுமாரின் மகனான அருண் விஜய் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி:

ஆர்த்தி ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகள் ஆவார் அதனால் அவரிடம் அதிகப்படியான சொத்துக்கள் இருந்தது என்று கூறப்படுகிறது. அடுத்ததாக ஜெயம் ரவி இவரது மனைவி பெயரும் ஆர்த்திதான் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தார் ஜெயம் ரவி. ஆர்த்தியின் அம்மா மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார். சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் நிறைய தொடர்களையும் படங்களையும் இவர் தயாரித்து இருக்கிறார்.

விஜய் – சங்கீதா

அதேபோல நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்தார் சிறுவயது முதலே சங்கீதா குடும்பமும் விஜய்யின் குடும்பமும் பழக்கத்தில் இருந்து வருகின்றனர். சங்கீதாவின் தந்தை லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.

அதனால்தான் விஜய் சங்கீதாவை திருமணம் செய்திருக்கிறார். அடுத்து நடிகர் கார்த்தியை கூற வேண்டும் நடிகர் கார்த்தி சினிமாவில் தமன்னாவை காதலித்து வந்ததாக கூறினாலும் ரஞ்சனி என்கிற பெண்ணை தான் அவர் திருமணம் செய்தார்.

இந்த ரஞ்சினியும் ஒரு கோடீஸ்வரர் வீட்டு பெண் என்று கூறப்படுகிறது இவருடைய தந்தை ஈரோட்டில் பெரிய தொழிலதிபராக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு இவர்கள் எல்லாம் சினிமாவிற்கு வெளியில் பெண்களை திருமணம் செய்திருந்தாலும் கூட இவர்கள் அனைவருமே பணக்கார பெண்களாக தான் இருந்திருக்கின்றனர்.

More in News

To Top