Connect with us

News

இதுக்காக தான் ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்.. சீரியல் நடிகை ஷாபனா குற்றச்சாட்டு..!

By TamizhakamAugust 2, 2024 6:43 PM IST

தமிழ்,மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷபானா. ஷபானா ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியல் மூலமாக அதிக பிரபலமானவர். தமிழ் சின்னத்திரையில் முதன்முதலாக காதல் சீரியலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதை நிரூபித்த சீரியல் செம்பருத்தி.

கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கும் அதிகமாக ஓடி சின்ன திரையில் பெரும் வெற்றியை பெற்றது இந்த தொடர். அதே சமயம் அதிகமாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட தொடராகவும் செம்பருத்தி இருந்தது. ஆனால் இல்லத்தரசிகள் மத்தியில் அந்த சீரியலுக்கு இருந்த வரவேற்பு காரணமாக அதற்குப் பிறகு காதல் சீரியல் என்பது தமிழ் சினிமா தமிழ் சின்ன திரையில் அதிகரிக்க துவங்கியது.

சீரியலில் பிரபலம்:

அதற்குப் பிறகு சன் டிவியும் காதல் சீரியல்களை எடுப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியது. இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது செம்பருத்தி நாடகம். ஆனால் உண்மையில் ஷபானா தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது.

கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் ஷபானா. ஆரம்பத்தில் அவர் சூர்யா தொலைக்காட்சியில்தான் பணிபுரிந்து வந்தார். மலையாள தொலைக்காட்சி தொடரில்தான் முதன் முதலில் அவர் நடிகையாக அறிமுகமானார். மிக தாமதமாகதான் ஜீ தமிழில் செம்பருத்தி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஒரு சீரியலில் நடித்தது மூலமாகவே தமிழக அளவில் வரவேற்பை பெற்றார் ஷபானா. செம்பருத்திக்கு பிறகு அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இன்னும் வேறு எந்த சீரியலிலும் அவர் கமிட் ஆகவில்லை.

சன் டிவியில் எண்ட்ரி:

அதே சமயம் மற்ற சின்னத்திரை சேனல்களும் இவரிடம் நாடகத்தில் நடிப்பதற்கு கேட்டு வருகின்றனர். ஷபானாவை பொருத்தவரை அவர் தனிப்பட்ட நடிப்பு திறனை கொண்டவர். அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ஷபானா.

செம்பருத்தி சீரியல் பொருத்தவரைக்கும் அதில் அவருக்கு முதலில் வேலைக்காரி தான் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை கூட அவர் நேர்த்தியாக நடித்திருந்தார். அதேபோல அடுத்து இப்பொழுது நடிக்கும் மிஸ்டர் மனைவி சீரியலில் அவருக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஷபானா. அதில் அவர் கூறும்போது செம்பருத்தி சீரியலில் நான் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும் அதில் பொட்டு வைத்துக் கொண்டிருந்ததற்காகவும் என்னுடைய குடும்பத்தினர் என்னுடன் ஒரு ஆண்டு காலம் பேசவில்லை.

நான் என்னுடைய மதத்தை புண்படுத்தி விட்டதாக கூறினார்கள் இதனாலேயே நான் ஒரு இந்து பையனைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனை தொடர்ந்து ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ஷபானா. ஏனெனில் ஷபானா ஒரு இஸ்லாமிய பெண்ணாவார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top