Connect with us

News

திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்.. இரண்டாம் திருமணம் செய்ய இது தான் காரணமாம்.. நடிகை ஸ்ரித்திகா ஓப்பன் டாக்..!

Published on : August 1, 2024 4:34 PM Modified on : September 29, 2024 4:34 PM

வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் பலரை நமக்கு தெரியும். ஆனால் மலேசியாவில் இருந்து வந்து தமிழில் வரவேற்பை பெற்றவர்தான் நடிகை ஸ்ரீதிகா. தமிழ் சின்னத்திரையில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

அதே சமயம் திரைத்துறையிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக கலசம் என்கிற சீரியலில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிகா.

சீரியலில் பிரபலம்:

அதற்கு பிறகு அவருக்கு நிறைய டிவி தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கலைஞர் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என்று பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதிகா. சமீபத்தில் அவர் நடித்த மகராசி சுந்தரி மாதிரியான சீரியல்கள் அதிக பிரபலமானவை ஆகும்.

இது இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து இருக்கிறார் நடிகை ஸ்ரீதிகா. இவர் நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் வெண்ணிலா கபடி குழு, வேங்கை மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

திருமண வாழ்க்கை குறித்து அவரை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஸ்ரீதிகா. நடிகர் ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அதேபோல் ஆரியனுக்கும் ரித்திகா இரண்டாவது மனைவி ஆவார். தன்னுடைய முதல் திருமணம் குறித்து கூறும் பொழுது கணவரை விவாகரத்து செய்வதற்கு காரணம் என்னவென்று அவர் கூறியிருந்தார்.

முதல் திருமணம்:

அவர் நல்ல மனிதர்தான் அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது திருமண வாழ்க்கை துவங்கிய பொழுது அவருக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஆரம்பத்தில் அது சரியாகிவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் போக போக அதிக பிரச்சனையாக பிரச்சனையாகி கொண்டுதான் இருந்தது.

நாங்கள் சிறு வயதில் ஒன்றும் திருமணம் செய்து கொள்ளவில்லை 30 வயதிற்கும் மேல்தான் எங்கள் வீட்டில் திருமணம் பார்த்து எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து எனக்கு முதல் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கை எனக்கு பிடித்தது போல அமையவில்லை.

அதில் எனக்கு பெரிய ஏமாற்றம்தான் கிடைத்தது கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்ததால் நாங்கள் இருவரும் பேசி தனி தனியாக பிரிந்து விடலாம் என்று முடிவு செய்தோம். இயற்கையான குணத்துடன் இருக்க வேண்டும் நமக்காக அவர்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கக் கூடாது அப்படிப்பட்ட நபர்களோடுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இதே மாதிரியான பிரச்சினையால்தான் ஆரியனும் அவரது முன்னாள் மனைவியை விட்டு பிரிந்து வந்தார் என்று கூறுகிறார் நடிகை ஸ்ரீதிகா.

More in News

To Top