Connect with us

News

அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட சுனைனா.. முன்னாள் மனைவி கேட்ட ஒரு வார்த்தை..!

By TamizhakamJuli 11, 2024 6:26 PM IST

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதற்கு முன்பே 2005 முதல் அவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் குமார் வெர்சஸ் குமாரி என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானார் சுனைனா அதற்குப் பிறகு மலையாளம் தெலுங்கு கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் எண்ட்ரி:

ஆனால் தமிழில் 2008 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் அப்போதுதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கி தன்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்திருந்தது என்பதால் அந்த திரைப்படத்திற்கு அதிகமான விளம்பரங்கள் இருந்தன.

அந்த விளம்பரம் சுனைனாவை அதிக அளவு பிரபலம் ஆக்கியது. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடித்து வந்தார் சுனைனா.

மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர் பறவை, சமர் என்று நிறைய திரைப்படங்களில் அப்போது பிரபலமாக இருந்த முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். 2016க்கு பிறகு சுனைனாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியது.

வெப்சீரிஸில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து மற்ற மொழி சினிமாக்களிலும் முயற்சி செய்து வந்தார் இதற்கு நடுவே 2018 ஆம் ஆண்டு நிலா நிலா ஓடி வா என்கிற வெப் சீரிஸில் நடித்தார் சுனைனா. இந்த வெப்சீரிஸில் ரத்த காட்டேரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது ஓரளவு வரவேற்பை பெற்றது என்றாலும் கூட அடுத்தடுத்த சீசன்கள் வராத காரணத்தினால் அந்த சீரியஸும் பெரிதாக மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. இந்த நிலையில் சுனைனா சலாமா என்கிற யூ ட்யூபர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வளவு நாட்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த சுனைனா சலாமாவைதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல அவரது பெயரை பச்சை குத்தி இருக்கிறார் சுனைனா.

யூ ட்யூப்பரை நடிகை திருமணம் செய்வது தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இஸ்லாமியரான சலாமா இதற்கு முன்பு காலிபா என்கிற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்சமயம் அவரோடு விவாகரத்து ஆன பிறகு சுனைனாவை திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய காலிபா கூறிய விஷயங்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார் ”எனது கணவனின் வாழ்க்கையில் சுனைனா வந்த பிறகுதான் அவருக்கு என் மீது இருந்த அன்பு குறைந்துவிட்டது. அதனை தொடர்ந்துதான் இப்பொழுது அவள் பக்கமே சென்று விட்டார் எனது கணவர். சுனைனா கண்டிப்பாக நன்றாகவே இருக்க மாட்டார் நாசமாக போய்விடுவார் என்றெல்லாம் காலிபா பேசியதாக கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top